சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும்.. திமுக வழக்கு.. அவசர வழக்காக ஏற்றது சுப்ரீம் கோர்ட்!

தமிழகத்தில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 3 தொகுதிகளுக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்த கோரி திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இடைத்தேர்தல் தொடர்பாக திமுக வழக்கு, அவசர வழக்காக ஏற்றது உச்சநீதிமன்றம்- வீடியோ

    சென்னை: தமிழகத்தில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 3 தொகுதிகளுக்கும் உடனடியாக சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்த கோரி திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறது.

    தமிழகத்தில் தேர்தல் பரபரப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. லோக்சபா தேர்தல் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது.

    SC accepts the DMK plea on 3 constituencies by-poll in Tamilnadu

    லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. மொத்தம் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது. ஆனால் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட மூன்று தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. நீதிமன்ற தேர்தல் வழக்கு காரணமாக தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் தமிழகத்தில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 3 தொகுதிகளுக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்த கோரி திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் இதை அவசர வழக்காக விசாரிக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதை அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மீதான விசாரணை வரும் வெள்ளிக்கிழமை துவங்க உள்ளது. ஏற்கனவே திருப்பரங்குன்றம் தொடர்பான தேர்தல் வழக்கை திரும்ப பெறுவதாக திமுக உறுப்பினர் சரவணன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    SC accepts the DMK plea on 3 constituencies by-poll in Tamilnadu, will hear the case from Friday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X