சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தெறி" பட கதைக்கு காரணமான.. உமா மகேஸ்வரி பலாத்கார கொலை.. 3 காமுகர்களுக்கும் ஆயுள் உறுதி

ஐடி பெண் கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்

Google Oneindia Tamil News

சென்னை: இளம் பெண்ணை புதருக்குள் இழுத்து சென்று, சீரழித்து.. வயிறு, கழுத்து என கழுத்தில் குத்தி கொன்ற 3 பேருக்கும் சுப்ரீம் கோர்ட் ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ளது.

2014ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி நடந்த சம்பவம் இது: சிறுசேரி சிப்காட்டின் ஐடி பெண் ஊழியர் உமா மகேஸ்வரி. வேலை முடிந்து அன்று இரவு 10 மணிக்கு வீட்டுக்கு கிளம்பிய அவரை அந்த பூங்கா வளாகத்திலேயே சடலத்துடன் மீட்கப்பட்டார்.

SC confirmed IT Woman Staff murder case convicted

அங்குள்ள புதருக்கு இவரை இழுத்து சென்று பலாத்காரம் செய்துள்ளனர். உமாவின் உடல் அழுகி போய் இருந்தது. வயிறு, கழுத்து சரமாரியாக குத்தப்பட்டு இருந்தது. பெரிய அளவில் ரத்த போக்கும் இருந்தது.

இந்த வழக்கில் மிகப்பெரிய அதிர்வை அன்று ஏற்படுத்தியது. இந்த வழக்கின் வேகமும் சூடு பிடித்தது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உத்தம் மண்டல், ராம் மண்டல், உஜ்ஜல் மண்டல் என்ற 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர்களுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. அத்துடன், உயிரிழந்த உமா மகேஸ்வரி குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையாக ரூ.2 லட்சத்தை 4 மாதத்துக்குள் அளிக்க வேண்டும் என்றும் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பிக்கு கோர்ட் உத்தரவிட்டு இருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து 3 கொலைகாரர்களும், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். ஆனால் கோர்ட் அந்த மனுவை டிஸ்மிஸ் செய்துவிட்டதுடன், ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து,
ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு 3 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

சுப்ரீம் கோர்ட்டும் இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளதுடன், சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை உறுதி செய்துள்ளது. அதன்படி பெண்ணை கடத்தி, முட்புதருக்குள் இழுத்து கொண்டு போய் நாசம் செய்து கொலை செய்த 3 பேருக்கும் ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது!

உமா மகேஸ்வரியின் கோரமான பலாத்கார, படுகொலையை வைத்துத்தான் விஜய் நடித்த தெறி படத்தின் கதையை இயக்குநர் அட்லீ உருவாக்கினார் என்பது நினைவிருக்கலாம்.

English summary
Suprme Court upholds life sentence of convicted in Chennai IT Staff Uma Maheswari Murder case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X