தமிழகத்தில் கன மழை.. எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை? லிஸ்ட் பெருசா போகுதே
சென்னை: கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டிருக்கிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சில இடங்களில் மழை மிகவும் அதிகமாக பதிவாகி வருகிறது. இந்நிலையில்தான் மாவட்ட நிர்வாகங்கள் அந்தந்த மாவட்டங்களில் நிலவரத்தைப் பொறுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன.
திருச்சியில் பரபரப்பு.. மனைவி கண் முன்னே அடித்து கொல்லப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர்

சென்னை, நெல்லை
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளஇ மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் கலெக்டர்
தஞ்சை, விழுப்புரம், நாகை, கடலூர், திருவாரூர் மாவட்டங்களிலும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை. விருதுநகர் மாவட்டத்தில் கனமழை காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று ஒருநாள் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார். தொடர் மழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

தேனி, திண்டுக்கல், பெரம்பலூர், சேலம்
தேனி மாவட்டத்தில் கனமழை காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று ஒருநாள் விடுமுறை. தென்காசி மாவட்டத்தில் கனமழை காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று ஒருநாள் விடுமுறை. திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை. கனமழை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை. சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு . அதேநேரம், ஆசிரியர்கள் வழக்கம்போல் பள்ளிகளுக்கு செல்ல அறிவுறுத்தல்.

வேலூர், மயிலாடுதுறை
வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை. தொடர்மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கனவே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது இப்போதைய நிலவரம்தான். காலை முதலே வரிசையாக மாவட்ட நிர்வாகங்கள் விடுமுறை அறிவிப்புகளை வெளியிட்டு வருவதால், லிஸ்ட் இன்னும் நீளும் வாய்ப்பை மறுக்க முடியாது.