• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

ஆசிரியர்கள் ஆகஸ்ட் 2 முதல் பள்ளிக்கு வர தமிழக அரசு உத்தரவு - யாருக்கெல்லாம் விதி விலக்கு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்க,நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி முதல் நாள்தோறும் பள்ளிக்கு வந்து பணிபுரிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு முதலே பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தொடக்க பள்ளிகள், நடுநிலை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளிகளின் பக்கம் வந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.

School reopening news: Teachers ordered to come to school from August 2,2021

9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சில மாதங்கள் மட்டுமே பள்ளிகளுக்கு வந்தனர். கொரோனா இரண்டாவது அலை மீண்டும் தீவிரமடையவே மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. ஆசிரியர்கள் வீடுகளில் இருந்தே ஆன்லைன் மூலம் பாடம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆசிரியர்கள் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2021-22 கல்வியாண்டிற்கான பள்ளி மாணாக்கர் சேர்க்கை பணிகளை அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள பொதுவான நெறிமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் மாணாக்கர் சேர்க்கை தொடர்பான ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக தலைமை ஆசிரியர்களுக்கு உதவியாக ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வருகை புரிந்து பணிபுரிய தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது மாணவர்கள் சேர்க்கை பணி, பள்ளிக்கால அட்டவணை தயாரித்தல், விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான நலத்திட்டங்கள் வழங்குதல், பள்ளி வகுப்பறை மற்றும் பள்ளி வளாகங்களை தூய்மை செய்தல், மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்ற பாட விவரங்களுக்கு ஏற்ப ஒப்படைப்புகள் வழங்கி அவற்றை மதிப்பீடு செய்தல், மதிப்பீடு செய்த விபரங்களை பதிவேடுகளில் பதிவு செய்து பராமரித்தல் போன்ற பணிகளை மெற்கொள்ளும் பொருட்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்க,நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தெதி முதல் நாள்தோறும் பள்ளிக்கு வருகை புரிந்து பணிபுரிய வேண்டும்.

பயிர் காப்பீட்டுத் திட்ட கட்டணத்தை மாற்றிய ஒன்றிய அரசு.. உடனே மோடிக்கு லெட்டர் அனுப்பிய ஸ்டாலின்! பயிர் காப்பீட்டுத் திட்ட கட்டணத்தை மாற்றிய ஒன்றிய அரசு.. உடனே மோடிக்கு லெட்டர் அனுப்பிய ஸ்டாலின்!

மாற்றுத்திறனாளிகள், புற்றுநோய் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள், இதய நோய் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருப்பவர்கள் மட்டும் உரிய ஆவணங்களை அளிக்கும் பட்சத்தில் பள்ளிக்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. பல மாவட்டங்களில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது. கொரோனா தாக்கம் குறைந்து விட்டதால் பள்ளி, கல்லூரிகள் விரைவில் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பொது முடக்கத்தில் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது பற்றி நிபுணர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது பள்ளி, கல்லூரிகளை திறப்பது பற்றிய முக்கிய அறிவிப்பினை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது இதன் முதற்கட்டமாகவே தற்போது ஆகஸ்ட் 2 முதல் ஆசிரியர்கள் அனைவரும் தினமும் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது

English summary
The reopening of schools was delayed due to the ongoing second wave of Covid-19 infections in the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X