சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரையாண்டு லீவு 1 நாள் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு.. எப்போ பள்ளிகள் திறக்கப்படும் தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குகூடுதலாக ஒரு நாள் அரையாண்டு விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கிறிஸ்துமசுக்கு முன்பு, அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்து, ஜனவரி 23ம் தேதியில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஜனவரி 3ம் தேதி, பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது.

Schools in Tamilnadu will re open on January 4th

இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை இன்று மாலை ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், அரையாண்டு விடுமுறை முடிவடைந்து, ஜனவரி 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கூடுதலாக ஒரு நாள் லீவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி 4ம் தேதி, சனிக்கிழமைதான், பள்ளிகள் திறக்கப்படும். இது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி நடைபெறும். ஒருவேளை, கூடுதலாக ஒருநாள் கூட வாக்கு எண்ணிக்கை தொடரும் வாய்ப்பு உள்ளது. வாக்கு எண்ணிக்கை பணியில் பள்ளி, ஆசிரியர்கள் கணிசமாக ஈடுபட்டிருப்பார்கள். எனவே, இதை கருத்தில் கொண்டு, பள்ளிகள் ஜனவரி 4ம் தேதி திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

English summary
Schools in Tamilnadu will re open on January 4th, this is one day extension.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X