சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாடங்கள் குறைக்கப்படுமா, பள்ளிகள் திறப்பது எப்போது? 10ம் வகுப்பு தேர்வு தள்ளிப்போகுமா:அமைச்சர் பதில்

Google Oneindia Tamil News

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் பொதுத்தேர்வுகள் முடிந்த பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி மார்ச் 24-ந் தேதி வரை நடந்தது லாக்டவுன் காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த வாரம் தொடங்கியது. 44 ஆயிரம் ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 schools open date will be decided after the 10th general exam: TN education minister senkottayan

இந்நிலையில் தள்ளி வைக்கப்பட்ட 10ம் வகுப்பு தேர்வு வரும் ஜூன் 15-ந்தேதி முதல் ஜூன் 25-ந்தேதி வரை நடைபெறும் என்றும் பொதுத்தேர்வின் போது ஒரு தேர்வு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று கடந்த மாதம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என்றும், பள்ளிக்குள் இப்போதைக்கு திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்று இன்னொரு பேட்டியில் கூறியிருந்தார்.

விரட்டி விரட்டி பிடிக்கும் போலீஸ்..அபராதம்.. சென்னையில் வாகனத்தில் செல்வோருக்கு கடும் கட்டுப்பாடுகள்விரட்டி விரட்டி பிடிக்கும் போலீஸ்..அபராதம்.. சென்னையில் வாகனத்தில் செல்வோருக்கு கடும் கட்டுப்பாடுகள்

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும். பொதுத்தேர்வுகள் முடிந்த பின்னரே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். பெற்றோர்கள், கல்வியாளர்களுடன் ஆலோசனை செய்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்போம். பாடங்களை குறைப்பது குறித்தும் நிபுணர் குழு ஆலோசித்து வருகிறது" என்றார்.

English summary
TN Education Minister Sengottaiyan said that the 10th grade general exam will be held as planned and the schools open date will be decided after the 10th general exam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X