சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆரம்பம் - ஆர்வமுடன் வந்த மாணவ மாணவிகள்

அரசு, தனியார் பள்ளிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இன்று முதல் எல்.கே.ஜி, 1ஆம் வகுப்பு, 6ஆம் வகுப்பு மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்கியுள்ளது. மாணவரை சேர்த்துவிட்டு பின்னர் தேவையான சான்றிதழ்களை பெற்று கொள்ள தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா காலமாக இருப்பதால் மார்ச் 24 முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 1 முதல் 10ஆம் வகுப்பு வரை ஆல்பாஸ் போடப்பட்டுள்ளது. பிளஸ் 1 பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு மதிப்பெண் பட்டிலும் கொடுக்கப்பட உள்ளன.

Schools to start admissions for classes one, six and nine from Today

பள்ளிகளில் புதிதாக மாணவர் சேர்க்கை எப்போது நடைபெறும் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, 1ஆம் வகுப்பு, 6ஆம் வகுப்பு மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 17 ஆம் தேதியிலும் 24 ஆம் தேதியில் இருந்து மேல்நிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க அரசு, தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. 2 முதல் 10ஆம் வகுப்புவரை வேறு பள்ளிகளில் சேர விரும்புபவர்களுக்கும் சேர்க்கை நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

இந்நிலையில், அரசு, தனியார் பள்ளிகளில் இன்று முதல் எல்.கே.ஜி, 1ஆம் வகுப்பு, 6ஆம் வகுப்பு மற்றும் 9ஆம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இதில் சமூக இடைவெளியை பின்பற்றி, உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன், மாணவர் சேர்க்கை பணிகளை நடத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இன்று முதலே விலையில்லா பாடப்புத்தகங்களையும், பைகள் உள்ளிட்ட அனைத்து விலையில்லா பொருட்களையும் மாணவர்களுக்கு வழங்கவும் அரசு உத்தரவிட்டதை அடுத்து மாணவர் சேர்க்கைக்குப் பின்னர் விலையில்லா நோட்டு புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

2010ல் போட்ட விதை.. 2016ல் நடந்த டுவிஸ்ட்.. எதிர்பார்க்காத மாற்றம்.. ஆன்லைன் ஷாப்பிங்கில் இனி!2010ல் போட்ட விதை.. 2016ல் நடந்த டுவிஸ்ட்.. எதிர்பார்க்காத மாற்றம்.. ஆன்லைன் ஷாப்பிங்கில் இனி!

சில சான்றிதழ்கள் இல்லை என்றாலும், முதலில் மாணவரை சேர்த்துவிட்டு, பின்னர் தேவையான சான்றிதழ்களை பெற்று கொள்ள தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. சில பள்ளிகளில் பெற்றோர்கள் மட்டும் வந்திருந்தனர்.

பள்ளிகள் திறக்கப்படும் வரை ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. கொரோனா தொற்று முடிவுக்கு வந்து இயல்பு நிலை திரும்பும் வரை இப்போதைக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.

English summary
Admissions for the 2020-21 academic year for classes one, six and nine will begin in schools from today August 17 Monday, the School Education Department announced on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X