சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காலாண்டு தேர்வு.. சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் அடை மழை பெய்தாலும் பள்ளிகள் விடாது இயங்கும்

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Heavy rain lashes in Chennai, Kanchipuram

    சென்னை: அடைமழை பெய்தாலும் விடாது பள்ளி இயங்கும் என சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்றிரவு முதல் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்த மழை வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக பெய்து வருகிறது.

    Schools will be functioning in Chennai, Tiruvallur and Kanchipuram as usual

    திருவள்ளூரில் ஒரே நாளில் அதிகபட்சமாக 21 செ.மீ. மழை பெய்தது. பூண்டியில் 20 செ.மீ. மழையும், திருத்தணி, தாமரைப்பாக்கத்தில் தலா 15 செ.மீ. மழையும், சோழவரத்தில் 13 செ.மீ. மழையும், திருவாலங்காட்டில் 12 செ.மீ. மழையும், பள்ளிப்பட்டு, கும்மிடிப்பூண்டி, ஆர் கே பேட்டையில் தலா 10 செ.மீ.மழை பெய்துள்ளது.

    சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை.. இடி மின்னலுக்கும் பஞ்சமில்லை

    என்னதான் கனமழை பெய்தாலும் காலாண்டு தேர்வு நடைபெற்று வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படவில்லை. இதனால் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என ஆட்சியர்கள் சென்னை சீதாலட்சுமி, திருவள்ளூர் மகேஸ்வரி, காஞ்சிபுரம் பொன்னையா ஆகியோர் அறிவித்துள்ளனர்.

    சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னைக்கு குடிநீரை வழங்கும் பூண்டி, செங்குன்றம், சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளின் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Schools will be functioning in Chennai, Tiruvallur and Kanchipuram as usual, respective collectors.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X