சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பாதிப்பு முடியும் வரை.. பள்ளிகளை திறக்க வாய்ப்பே இல்லை.. அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் முழுமையாக கொரோனா பாதிப்பு முடியும் வரை, பள்ளிகளை திறக்க வாய்ப்பே இல்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது. இதன் காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வும் கடந்த 2 மாதம் முன் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் இரண்டு நாட்கள் முன் கல்லூரி முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் செமஸ்டர் தேர்வு இன்றி அடுத்த ஆண்டுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. பொறியியல் படிப்பிற்கு மூன்றாம் ஆண்டு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

102 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது.. உடனே சட்டசபையை கூட்டுங்கள்.. ஆளுநருக்கு ராஜஸ்தான் முதல்வர் கோரிக்கை!102 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது.. உடனே சட்டசபையை கூட்டுங்கள்.. ஆளுநருக்கு ராஜஸ்தான் முதல்வர் கோரிக்கை!

மீண்டும் திறக்கப்படுமா?

மீண்டும் திறக்கப்படுமா?

இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. எப்போது பள்ளிகள் திறக்கும் என்று நிறைய வதந்திகள் வந்து கொண்டு இருந்தது. ஆகஸ்ட் மாதம் பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளது என்றும் கூட வதந்திகள் வெளியானது. ஆனால் இது தொடர்பாக எந்த விதமான உறுதியான தகவலும் வரவில்லை. தற்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இது தொடர்பான பேட்டியளித்துள்ளார்.

தயார் செய்யும் பணிகள்

தயார் செய்யும் பணிகள்

பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது பேட்டியில், 10 ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பட்டியல் அடுத்த மாதம் வழங்கப்படும். மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.எல்லோருக்கும் பள்ளிகள் தொடங்கும் முன் புத்தகம் வழங்கப்படும். வீட்டில் இருந்து படிக்க வசதியாக மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்படும்.

எண்ணம் எங்களுக்கு இல்லை

எண்ணம் எங்களுக்கு இல்லை

தமிழகத்தில் இப்போது பள்ளிகளை திறக்கும் எண்ணம் இல்லை. அடுத்த மாதம் அல்லது செப்டம்பர் மாதம் பள்ளி திறப்பது குறித்து எங்களுக்கு அறிவுரைகளை வழங்கி உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு எங்களுக்கு கடிதம் எழுதி உள்ளது. இதை ஆலோசனை செய்து வருகிறோம்.

சூழ்நிலையை பொறுத்தே

சூழ்நிலையை பொறுத்தே

பள்ளிகளை திறக்கும் திட்டம் எதுவும் இல்லை. மாநிலத்தில் நிலவும் சூழ்நிலையை பொறுத்தே முடிவு எடுக்கப்படும். கொரோனா பாதிப்பு இருக்கும் வரை பள்ளிகளை திறக்க முடியாது. கொரோனா சரியான பின்புதான் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். சரியான நேரத்தில் முதல்வருடன் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும், என்று கூறியுள்ளார்.

Recommended Video

    2 கொரோனா Vaccines: 6 நகரங்களில் வேகமாக மனித சோதனை..

    English summary
    Schools will be opened after the pandemic only says TN educational minister in his press meet.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X