சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திடீர் அமைதி.. சத்தமே இல்லை.. "இதுதான் ஒருவேளை அதுவோ".. நிவரால் மாமல்லபுரம் கடலில் ஏற்பட்ட மாற்றம்!

Google Oneindia Tamil News

சென்னை: நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுக்க கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. ஆனால் மாமல்லபுரத்தில் மட்டும் கடல் திடீரென்று ஆர்ப்பரிப்பு இன்றி உள்ளது. இதற்கான காரணம் என்ன என்ற விவரம் வெளியாகி உள்ளது.

வங்க கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுக்க பல மாவட்டங்களில் தீவிர மழை பெய்து வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் இந்த புயல் அதி தீவிர புயலாக உருவெடுக்க உள்ளது.

சென்னையில் இருந்து 340 கிமீ தொலையில் புயல் உள்ளது. சென்னையை நோக்கி வரும் புயல் காரணமாக தற்போது சென்னையில் கனமழை பெய்து வருகிறது.

கடல்

கடல்

இன்னொரு பக்கம் நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுக்க பல்வேறு கடலோர மாவட்டங்கள் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இந்த புயல் வங்ககடலில் வழியாக வந்து தமிழகத்தில் கரையை கடந்து செல்வதால் கடல் ஆர்பரிப்புடன் காணப்படுகிறது. இதனால் கடலோர மாவட்டங்களில் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கொந்தளிப்பு

கொந்தளிப்பு

இந்த புயல் காரணமாக வங்கக்கடலை ஒட்டி இருக்கும் பகுதிகளில் எல்லாம் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகிறது. நேற்று காலையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி இருக்கும் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் உள்ளது. விழுப்புரம், காசிமேடு, மாமல்லபுரத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

தண்ணீர்

தண்ணீர்

சில இடங்களில் தண்ணீரும் ஊருக்குள் வந்தது. கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் நிலையில் மாமல்லபுரத்தில் மட்டும் கடந்த சில மணி நேரமாக கடல் ஆர்ப்பரிப்பு இன்றி உள்ளது. காலையில் கடல் ஆர்ப்பரிப்புடன் காணப்பட்ட நிலையில் திடீர் அமைதி நிலவி வருகிறது. புயல் நெருங்கும் நிலையில் மாமல்லபுரத்தில் கடல் அமைதியாக இருக்கிறது.

காரணம் என்ன

காரணம் என்ன

கடலில் பெரிய அளவில் காற்றும் வீசவில்லை. அதேபோல் அலையும் பெரிதாக இல்லை. இந்த திடீர் மாற்றம் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையின் மற்ற பகுதிகளில் கடல் ஆர்பரிப்புடன் உள்ளது . மாமல்லபுரத்தில் மட்டும் இப்படி அமைதி நிலவ காரணம் என்ன என்ற விவரம் வெளியாகி உள்ளது.

காற்று வீசாது

காற்று வீசாது

பொதுவாக புயல் தாக்குவதற்கு முன் சில மணி நேரங்களுக்கு முன் கடலில் காற்று வீசாது. புயல் அதி தீவிர புயலாக மாறுவதற்கு சில நேரங்கள் முன் இப்படி நடக்கும். சில கடற்கரைகளில் இந்த மாற்றம் எதிரொலிக்கும். காற்று, அலை எதுவும் இருக்காது. நிசப்தம் மட்டும் காணப்படும். அதன்பின்தான் புயல் தாக்கும். காற்று வீசும்.

அமைதி

அமைதி

அதன்படிதான் மாமல்லபுரத்தில் அமைதி நிலவி வருகிறது. இது இயற்கையான விஷயம்தான். கொஞ்ச நேரத்தில் மீண்டும் அலைகள் இங்கு விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பு உள்ளது. மீண்டும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அமைதி தற்காலிகம்தான்.. யாரும் குழப்பம் அடைய வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

புயலுக்கு முன்

புயலுக்கு முன்

புயலுக்கு முன் அமைதி என்று சொல்வார்களே அதுதான் தற்போது மாமல்லபுரத்தில் ஏற்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. சேதத்திற்கு முன் ஏற்படும் அமைதி அச்சம் ஏற்படுத்த கூடியதாக இருக்கும். அந்த அமைதிதான் இப்போது ஏற்படுகிறதோ.. இனிதான் தாக்கம் அதிகரிக்க தொடங்குமோ என்று கேள்வி எழுந்துள்ளது.

English summary
Sea in Mamallapuram coastal areas becomes silent hours before Nivar Storm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X