சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கூட்டணி ஓகே.. பங்கீடும் ஓகே.. ஆனால் "வீக்" தொகுதிகளா தர்றாங்களே.. அலறும் கட்சிகள்

கூட்டணிகளுக்குள் இன்னும் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    புலம்பிக் கொண்டிருக்கும் அதிமுக, திமுக-வின் கூட்டணி கட்சிகள்- வீடியோ

    சென்னை: திமுக, அதிமுக இந்த 2 தலைமையிடமும் பெரும்பாலான கூட்டணி கட்சிகள் மெல்லவும் விழுங்கவும் முடியாமல் தவித்து வருகிறதாம்.

    2 மாதமாக நடத்தப்பட்டு வந்த கூட்டணி பேச்சுவார்த்தைகள் எல்லாம் 2 நாளைக்கு முன்னாடிதான் ஓரளவு இறுதியானது.

    ஆனால் ஆரம்பத்திலேயே கூட்டணியில் சீட் ஒதுக்கிய கட்சியாக இருந்தாலும், சமீபத்தில் கூட்டணியில் சேர்ந்தாக கட்சியாக இருந்தாலும், இன்னும் தொகுதி உடன்பாட்டில் இழுபறிதான் நீடித்து வருகிறது.

    <strong>ஜெயிக்கவே முடியாத தொகுதிகளை அதிமுக கொடுத்ததா.. அதுதான் தேமுதிகவுக்கு கோபமா.. என்ன நடக்கிறது? </strong>ஜெயிக்கவே முடியாத தொகுதிகளை அதிமுக கொடுத்ததா.. அதுதான் தேமுதிகவுக்கு கோபமா.. என்ன நடக்கிறது?

    பிரதான கட்சிகள்

    பிரதான கட்சிகள்

    இதற்கு முக்கிய காரணம், பிரதான கட்சிகள் தங்களுக்கு பெரும்பான்மை இல்லாத இடங்களில் கூட்டணி கட்சிகளை நிற்க வைப்பதாக பார்ப்பதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது. அப்படி ஒதுக்கப்படும் தொகுதிகள் எல்லாம் கொஞ்சமும் வெற்றி பெற முடியாத தொகுதிகளாகவே இருக்கிறதாம்.

    புது குழப்பம்

    புது குழப்பம்

    சீட் கிடைக்கிறதே என்று அதை பெற்று கொண்டாலும்,தோற்றுவிடுவோம் என்று தெரிந்தும் எப்படி அந்த தொகுதியில் நிற்க முடியும் என்று சில கட்சிக்குள்ளேயே குழப்பம் எழுந்துள்ளதாம். அதிலும் ஒரு சீட் வாங்கினவர்கள் நிலைமையோ இன்னும் பரிதாபம்.

    வெறுப்பு

    வெறுப்பு

    இவர்களுக்கு வேறு ஆப்ஷனும் கிடையாது. சொல்லும் தொகுதிகளில் நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. ஆட்சி, அதிகாரம் கையில் உள்ளவரை விருப்பம்போல இருந்துவிட்டு, கடைசியில் மக்களின் வெறுப்பையும், அதிருப்தியையும் நாம அறுவடை செய்யும்படி ஆகிறதே என்று கையை பிசைந்து நிற்கிறார்களாம்.

    புலம்புகிறார்கள்

    புலம்புகிறார்கள்

    ஆனால் தங்களது கட்சியையும் , தொண்டர்களையும் தக்கவைத்துக் கொள்வதற்காகவாவது ,பெரும்பான்மை கட்சிகள் இடும் கட்டளைக்கு செவிசாய்க்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகி விடுகிறதென புலம்பி வருகிறார்களாம் அக்கட்சி தலைவர்கள்!

    English summary
    Alliance parties are reported to be dissatisfied with the seat allocation issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X