சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

9, 2... இஷ்டமா.. கஷ்டமா? கூட்டணி கட்சிகளை தேர்தல் நேரத்தில் வெச்சு செய்கின்றனவா திமுக, அதிமுக?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான அதிமுக, திமுக கூட்டணிகளில் எத்தனை தொகுதிகள்தான் கிடைக்குமோ என கட்சிகள் ரொம்பவே பரிதவித்து போய்கிடக்கின்றன.

தமிழக சட்டசபை தேர்தல் வரலாற்றில் ஒவ்வொரு முறையும் கூட்டணிகளில் சிக்கல் இல்லாமல் இருந்தது இல்லை. ஒவ்வொரு கூட்டணியிலும் கடைசி நேரத்தில் ஏதோ ஒரு கட்சி அதிருப்தியில் அல்லாடுவது வாடிக்கையானதுதான்

ஆனால் தற்போதைய தேர்தலில் பல கட்சிகள் இப்படி அல்லாடுவதை பார்க்க முடிகிறது. ரஜினிகாந்த் ஆதரவு தைரியத்தில் கூட்டணி கட்சிகளுக்கும் சேர்த்து மொத்தம் 100 சீட் கேட்டது பாஜக. அதிமுகவை குறைவான தொகுதிகளில் போட்டியிட வைத்து அதன் கதையை முடிப்பதுதான் பாஜகவின் திட்டமாக இருந்தது.

அதிமுக-பாமக, பாஜக

அதிமுக-பாமக, பாஜக

ரஜினிகாந்த் அரசியலுக்கே வரவில்லை என சொல்லிவிட்ட நிலையில் அப்படியே ஜகாவாங்கி இருக்கிறது பாஜக. அதிமுக அணியில் அதிகபட்சம் 20 முதல் 25 தொகுதிகள் கிடைத்தாலே போதும் என்கிற நிலைக்கு வந்துவிட்டது பாஜக. அதே அதிமுக அணியில் பாமக, பாஜகவைவிட கூடுதல் தொகுதிகளை கேட்டுக் கொண்டிருக்கிறது.

அதிமுக- தேமுதிக

அதிமுக- தேமுதிக

மத்தியில் ஆளும் கட்சி என்பதால் பாஜகவையும் வடமாவட்ட செல்வாக்கு என்ற அடிப்படையில் பாமகவையும் அதிமுக மதித்து பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் தேமுதிகவை பொருட்டாக சீண்ட மறுக்கிறது அதிமுக. அப்படியே வந்தாலும் 9 சீட் தருகிறோம் என்கிறது அதிமுக. வெறும் 9 சீட்தானா? பாஜக, பாமகவை விட பெரிய கட்சி நாங்க என இன்னமும் பழைய நினைப்பில் உதார்விட்டுப் பார்க்கிறது தேமுதிக. இப்படியே போனால் தேமுதிக நடுத்தெருவில் தனியேதான் போட்டியிட வேண்டிய நிலை.

திமுக கூட்டணி

திமுக கூட்டணி

அதேபோல் ராஜ்யசபா சீட் கொடுத்துவிட்டதால் எத்தனை இடம் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு போகப் போகிறது தமாகா. அந்த பக்கம் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு உச்சகட்ட இடியாப்ப சிக்கலாக தெரிகிறது. மதிமுக கேட்கும் தொகுதிகளை தர மறுக்கிறது திமுக. விடுதலை சிறுத்தைகளுக்கும் கேட்கிற சீட் கிடையாது என்கிறது திமுக தலைமை. மதிமுக, விசிக போன்ற கட்சிகள் எல்லாம் திமுக தலைமை மீது வெளியே சொல்ல முடியாத கடும் அதிருப்தியில் இருக்கின்றன.

திமுக- காங்.

திமுக- காங்.

இதேநிலைதான் காங்கிரஸ் கட்சிக்கும். அந்த காலத்துல 60 இடங்களை எல்லாம் திமுக அணியில் வாங்கிய காங்கிரஸ் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது. அதேபோல் இடதுசாரிகளும் கவுரவமான இடங்கள் கிடைக்குமா? என கலவரப்பட்டு போய் கிடக்கிறார்கள். திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு தனித்தனியே ஏறத்தாழ சமமான வாக்கு வங்கிகள் இருக்கவே செய்கின்றன. கூட்டணி கட்சிகள் சில நேரங்களில் வெற்றி தோல்விக்கு காரணங்களாகவும் இருந்துவிடுகின்றன.

கூட்டணிகள்- திமுக, அதிமுக

கூட்டணிகள்- திமுக, அதிமுக

இம்முறை திமுக அதீத நம்பிக்கையுடன் மு.க.ஸ்டாலின் எனும் நான் என இப்போதே படுகெத்தான தோரணையை காட்டுகிறது. இதே போக்கைத்தான் கூட்டணி கட்சிகளிடமும் திமுக காட்டுவது அப்பட்டமாகவே தெரிகிறது. அதிமுகவோ சசிகலா என்ன செய்வார்? பாஜக என்ன செய்யும்? என்கிற பதைபதைப்பில் எக்ஸ்ட்ரா லக்கேஜ் என கருதி தேமுதிக உள்ளிட்டவை தொல்லைதான் என கருதுகிறது போல. இந்த முறை அங்கிங்கெனாதபடி கூட்டணி கட்சிகள் பலவற்றையும் திமுக, அதிமுக இரண்டும் திராட்டில் விட்டு வெச்சு செய்வதாகவே தெரிகிறது.

English summary
Seat Sharing is become big trouble in ADMK, DMK lead Alliances for the Assembly Elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X