சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெ. 7 கொடுத்தார்.. நீங்க பத்தாவது கொடுங்களேன்.. அதிமுகவை அணத்தி வரும் பாஜக

10 தொகுதிகளையாவது வாங்கிவிட வேண்டும் என்று பாஜக நினைக்கிறதாம்.

Google Oneindia Tamil News

Recommended Video

    லோக் சபா சீட்டு விவகாரம் : அதிமுகவை அணத்தி வரும் பாஜக- வீடியோ

    சென்னை: எப்படியாவது இந்த முறை அதிமுகவிடம் அடித்து பிடித்து 10 சீட்டுக்களையாவது வாங்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி இறங்கி உள்ளதாம் பாஜக தரப்பு!!

    நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரப்போகிறது. இதனால் எல்லா கட்சிகளும் ஒரு பக்கம் தீவிரமான பிரச்சாரத்திலும் மற்றொரு பக்கம் கூட்டணி சம்பந்தமான பேச்சுவார்த்தையிலும் இறங்கி உள்ளனர்.

    இதில் அதிமுக-பாஜக அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தையை சென்ற வாரமே தொடங்கிவிட்டது. அப்போது மேற்கு மண்டலத்தை சேர்ந்த ஒரு சில எம்பி தொகுதிகள் தேவை என்பதால் பாஜக 12 தொகுதிகள் வேண்டும் என்று டிமாண்ட் செய்ததாகவும், ஆனால் இதற்கு அதிமுக எடுத்த எடுப்பிலேயே சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

    பியூஷ் கோயல்

    பியூஷ் கோயல்

    இதையடுத்து, கடந்த 1998-ம் ஆண்டு தேர்தலில் 6 தொகுதிகளையும், 2004-ம் ஆண்டு தேர்தலில் 7 தொகுதிகளையும் பாஜகவுக்கு ஜெயலலிதா ஒதுக்கியிருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டிய பியூஷ் கோயல், 12 இல்லையென்றால், குறைந்தது 10 தொகுதிகளாவது வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

    10 தொகுதிகள்

    10 தொகுதிகள்

    குறிப்பாக தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர், வேலூர், திருப்பூர், கோவை, கன்னியாகுமரி, தஞ்சை, சிவகங்கை, நெல்லை, மதுரை ஆகிய இந்த 10 தொகுதிகளை விட்டுத்தர பாஜக விரும்பவே இல்லையாம். அதனால்தான் 10 தொகுதிகளில் உறுதியாக பாஜக நிற்கிறதாம்.

    கூட்டணிக்கு தலா 1

    கூட்டணிக்கு தலா 1

    அதேபோல தங்கள் கூட்டணியில் உள்ள புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா 1 தொகுதிகளையும் சேர்த்து கேட்டு கொண்டிருக்கிறது. இதனால் அதிமுக-பாஜக இடையே இன்னமும் இழுபறிதான் நீடிப்பதாக சொல்லப்படுகிறது.

    அதிமுக பிடிவாதம்

    அதிமுக பிடிவாதம்

    ஆனால் 2 விஷயத்தில் அதிமுக உடும்பு பிடியாக இருக்கிறதாம். மதுரை, நெல்லை, தென்சென்னை, தஞ்சை இந்த தொகுதிகளை கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்க போவதாகவும், அதனால் இந்த 4 தொகுதிகளை மட்டும் தர விருப்பமில்லை என்றும் அதிமுக தரப்பில் நேரடியாகவே சொல்லப்பட்டு விட்டதாம். அதேபோல, பாஜகவுக்கு மக்கள் செல்வாக்கு எங்கிருக்கிறதோ அதனடிப்படையிலேயே தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் முடிவிலும் கறாராக இருக்கிறதாம்.

    வருகிற 24-ந் தேதி

    வருகிற 24-ந் தேதி

    இருந்தாலும் கூட்டணி சம்பந்தமாக, ஜெயலலிதாவின் பிறந்த நாளான வருகிற 24-ந்தேதி இறுதி செய்து விட வேண்டும் என்று அதிமுக தரப்பில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. அதேபோல, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் ஒரு நல்ல நாளாக பார்த்து தொகுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்ற முடிவிலும் அதிமுக உள்ளது.

    English summary
    Tight negotiations between the DMK-AIADMK in seat segment. BJP demands atleast 10 consitutency in MP Election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X