சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

25 + 15 + 400 தாமரை.. "விட்றாதீங்க, கவனம்".. மேலிட ரகசிய உத்தரவு.. தெம்புடன் தமிழக பாஜக.. என்னவாம்?

பிரதமர் மோடி தமிழக பாஜக தலைவர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்தாராம்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக, திமுக கட்சிகளின் பரபரப்புகளுக்கு நடுவே பாஜகவும் தன்னுடைய அதிரடியை சத்தமில்லாமல் துவங்கி உள்ளது.. இதுகுறித்த தகவல் ஒன்றுதான், அனைத்து தமிழக கட்சிகளையும் திரும்பி பார்க்கவைத்து வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு, மதுரையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிய பேச்சுக்கள் இன்னமும் சோஷியல் மீடியாவில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.

அண்ணாமலை அப்போது பேசியபோது, "15 இடங்களில் பாஜக வெற்றி உறுதி.. மிச்சம் 25 தொகுதிகளில் மட்டுமே கவனம் செலுத்துவது பாஜகவின் ஒரே லட்சியம்" என்றார்..

அதேபோல பொள்ளாச்சி கூட்டத்தில் பேசியபோது, "கடந்த 8 வருடகாலத்தில் பாஜக ஆட்சிக்கு மக்கள் ஆதரவு நல்ல நிலையிலேயே உள்ளது.. பாஜக நல்ல ஆட்சியையும் தந்துள்ளது.. ஆனால், தமிழக மக்கள் இந்த ஒரு வருடத்தில்தான் விரக்தியின் உச்சத்துக்கே போய்விட்டனர்.. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக 25-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும்" என்று கூறியிருந்தார்.

பீகாரில் ஒரு “ஏக்நாத் ஷிண்டே”.. பாஜக திட்டம் முறியடிப்பு! சுதாரித்த நிதீஷ் - கழற்றிவிடப்பட்ட தாமரை பீகாரில் ஒரு “ஏக்நாத் ஷிண்டே”.. பாஜக திட்டம் முறியடிப்பு! சுதாரித்த நிதீஷ் - கழற்றிவிடப்பட்ட தாமரை

 25 தாமரைகள்

25 தாமரைகள்

அதேபோல, பல்லடத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசும்போது, "வரப்போகும் தேர்தலில் 400 எம்பிகளுடன் வெற்றி பெற்று மோடிஜியை மீண்டும் உட்கார வைக்க வேண்டும்.. மெஜாரிட்டிக்கு 273 எம்.பி போதும் என்றாலும், இந்த அமெரிக்காக்காரனை எல்லாம் மிரட்ட வேண்டும்.. 303 எம்பி கொடுத்ததற்கே பாகிஸ்தான், சீனாக்காரன் வாலை சுருட்டிக் கொண்டார்கள்.. 8 வருடங்களாகவே எங்கேயும் குண்டு வெடிக்கவில்லை. வெடித்தால் அந்த நாடே இருக்காது.. மோடி என்ற புதிய மந்திர சொல்தான் அந்த தைரியத்தை கொடுத்திருக்கிறது" என்றார் அண்ணாமலை.

 தாமரைகள்

தாமரைகள்

எல்லாவற்றிற்கும் மேலாக, "தமிழகத்திலும் பாஜக ஆட்சி மலரும்" என்று அமித்ஷா ஹைதராபாத் மாநாட்டில் சூளுரைத்ததையடுத்து, தமிழக பாஜக தன்னுடைய வேகத்தை கூட்டி உள்ளது.. அதற்கேற்றபடி சமீபத்தில் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை துவக்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வந்திருந்தபோது, பாஜக தலைவர்களை சந்தித்து பேசியதும், அவர்களுடன் ஆலோசனை நடத்தியதும் கூடுதல் பலத்தை தந்து வருகிறது.

 ஆ ராசா

ஆ ராசா

ஆளுநர் மாளிகையில்தான் அன்றைய தினம் பிரதமர் தங்கியிருந்தார்.. அப்போது பாஜகவின் ஆலோசனை கூட்டம் அங்கேயே நடந்துள்ளது.. ஆனால், இவர்கள் எல்லாம் என்ன பேசினார்கள் என்பது இப்போது வரை உறுதியாக தெரியவில்லை.. அதேசமயம், சில யூகங்கள் றெக்கை கட்டி பறந்தன.. அதில், ஆ.ராசா பற்றிதான் நிறைய புகார்களை சொன்னார்களாம். பிறகு, திமுக அரசு பற்றியும், எடப்பாடி பற்றியும்கூட நிறைய தகவல்களை பிரதமருக்கு பாஸ் செய்ததாக கூறப்பட்டது. அந்த சமயத்தில், பாஜக தலைவர்களுக்கு பிரதமர் மோடி சில முக்கிய அட்வைஸ்களை தந்துள்ளார்..

விட்றாதீங்க

விட்றாதீங்க

அதாவது, "நான் பலமுறை தமிழகம் வந்திருக்கிறேன். ஆனால், சமீபகாலமாக தமிழக மக்களிடம் பெரும் மாற்றத்தை பார்க்கிறேன்... அவர்கள் பாஜகவை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளனர்.. அதை உணர்ந்து கட்சிப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். திமுக என்பது சித்தாந்த ரீதியாக பாஜகவுக்கு எதிரான கட்சி... அதனால் திமுகவை நாம் எதிர்க்கும்போது, அது, தமிழ் மொழி, கலாசாரத்திற்கு எதிரான கட்சி என்பதுபோல மக்களிடம் சென்று சேர்ந்து விடக் கூடாது.. இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.. மாநில அரசு செய்யும் தவறுகளை, ஆதாரங்களுடன் மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும்" என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.

 இன்ஸ்ட்ரக்‌ஷன்

இன்ஸ்ட்ரக்‌ஷன்

அதுமட்டுமல்ல, மிக முக்கிய உத்தரவையும் அப்போது பிரதமர் பிறப்பித்து விட்டு போனாராம்.. ''சூழல் நமக்கு சாதகமாக இருக்கிறது.. அதனால், தமிழகம் முழுக்க அனைத்து ஓட்டு சாவடிகளிலும் பாஜக பூத் கமிட்டிகளை அமையுங்கள்" என்றாராம்.. பிரதமர் இப்படி தந்த உற்சாகத்தினால், பூரித்து போன பாஜக தலைவர்கள், பூத் கமிட்டிகள் அமைக்கற வேலையில் இறங்கி விட்டனராம்.. அந்த பணிகளை துரிதப்படுத்துமாறு நிர்வாகிகளுக்கு உத்தரவு போடவும், அவர்களும் சுறுசுறுப்பாக பணியில் இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

 தாமரைகள்

தாமரைகள்

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாடு நடத்தவும் திட்டமிட்டு வருகிறார்களாம்.. 2024 எம்பி தேர்தலுக்கு, அனைத்து கட்சிகளையும்விட முதலில் களமிறங்கி உள்ளது பாஜகதான்.. இதற்கான மும்முரத்தை கடந்த 2 மாதங்களுக்கு முன்பேயே துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது.. அந்தவகையில்தான் பூத் கமிட்டி வேலைகளையும், பல கட்சிகளையும் ஓவர்டேக் செய்து கொண்டு, களத்தில் இறங்கி விட்டதாம் பாஜக.. ஆக, அண்ணாமலை சொன்னதுபோல், தமிழகத்தில் 25 தாமரைகளா? அல்லது 15 தாமரைகளா? அல்லது தேசிய அளவில் 400 தாமரைகளா? என்று உறுதியாக தெரியவில்லை.. பார்ப்போம்..!

English summary
Secret order issued by the pm modi to tn BJP executives and whats annamalais next plan பிரதமர் மோடி தமிழக பாஜக தலைவர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்தாராம்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X