சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராமநாதபுரம்.. ஒரு சீக்ரெட் சென்டிமென்ட் இருக்கு.. யாருக்காச்சும் தெரியுமா.. இதை படிங்க!

ராமநாதபுரம் தொகுதியில் களமிறங்க போகும் வேட்பாளர்கள் யாராக இருக்கும்?

Google Oneindia Tamil News

Recommended Video

    ராமநாதபுரத்தில் அரசியல் கட்சிகள் எப்படி காய் நகர்த்துகிறது தெரியுமா?- வீடியோ

    சென்னை: ராமநாதபுரம் தொகுதியை பொறுத்தவரை ஒரு சீக்ரெட் சென்ட்டிமென்ட் என்ன தெரியுமா? முதல்ல தொகுதி நிலவரத்தை படிங்க... புரியும்!

    ராமநாதபுரம் தொகுதியின் சிட்டிங் எம்பி அன்வர்ராஜா. அதிமுக-பாஜக கூட்டணிக்கு பிறகு எக்கச்சக்க எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார். எங்கு சென்றாலும் பொதுமக்களின் அதிருப்தி வெளிப்பட்டு வருகிறது. இது போக இவருக்கு அதிமுக இந்தமுறை சீட் தருமோ தராதோ என்பது தெரியவில்லை.

    பாஜகவை பொறுத்தவரை இந்த தொகுதியை இழக்க விரும்பவில்லை. புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் பாஜக தரப்பில் களமிறங்க போவதாக கூறப்படுகிறது.

    தேர்தல் தேதி அறிவிச்சாச்சு.. புதுப்பொலிவுடன் 5-ஆவது முறையாக ரேபரேலியில் களமிறங்குகிறார் சோனியா! தேர்தல் தேதி அறிவிச்சாச்சு.. புதுப்பொலிவுடன் 5-ஆவது முறையாக ரேபரேலியில் களமிறங்குகிறார் சோனியா!

    குப்புராமு

    குப்புராமு

    கடந்த முறை குப்புராமுவை வேட்பாளராக பாஜக நிறுத்தியபோது கிட்டத்தட்ட 1 லட்சத்து 60 ஆயிரம் ஓட்டுக்கள் வாங்கி தோற்றார். இதனால் இந்த முறையும் குப்புராமுவையே நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது. இவர் பாஜக மாநில தலைவர் மட்டுமல்லாது ஒரு வழக்கறிஞரும்கூட. ஒருவேளை இவருக்கு பதிலாக கருப்பு முருகானந்தம் என்ற செல்வாக்கு மிக்கவரையும் பாஜக நிறுத்த யோசனை செய்து வருகிறது.

    அகமுடையார்

    அகமுடையார்

    இன்னும் வெளிப்படையாக சொல்லப்போனால், இப்போதைக்கு பாஜகவில் இரண்டு சாய்ஸ்கள் உள்ளன. அது திமுக-காங்கிரஸ் வேட்பாளரை பொறுத்து முடிவாகும். திமுக சார்பில் முன்னாள் எம்பி பவானி ராஜேந்திரனுக்கு வாய்ப்பு கிடைத்தால், பாஜக சார்பில் குப்பராமு நிறுத்தப்படுவார். என்று சொல்லப்படுகிறது. இதற்கு காரணம், இருவருமே அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்தான். அதனால் இரு தரப்பிலுமே சாதி ஓட்டுக்கள் பலமாகும்.

    நவாஸ்கனி

    நவாஸ்கனி

    அதேபோல, திமுக சார்பில் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி என்பவர் நிறுத்தப்பட்டால், அதிமுக சார்பில் அன்வர்ராஜா நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. இரு தரப்பு முஸ்லீம் என்பதால் ஓட்டுக்கள் சரிசமமாக விழுந்துவிடும். இதுதான் காலகாலத்துக்கும் நடந்துவரும் வழிமுறை ஆகும்.

    பிரதமர் வாய்ப்பு

    பிரதமர் வாய்ப்பு

    அதுமட்டுமல்ல, பொதுவாக ராமநாதபுர பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை எந்த கட்சி ஜெயித்து வருகிறதோ அந்த கட்சி அல்லது அதன் கூட்டணி கட்சிதான் பிரதமராக வருவாராம். உதாரணமாக திமுக சார்பில் நவாஸ்கனி நிறுத்தப்படுவதாக வைத்து கொண்டால், அக்கட்சி கூட்டணி வைத்துள்ள காங்கிரசின் ராகுல் பிரதமராக வருவார்.

    சென்டிமெண்ட்

    சென்டிமெண்ட்

    இதுதான் ராமநாதபுர தொகுதியின் சென்டிமென்ட். இப்படித்தான் பெரும்பாலும் நடந்து வந்திருக்கிறது. இதை மனதில் வைத்தே எல்லா கட்சிகளும் காய் நகர்த்துவதுதான் கடந்த கால வரலாறு!

    English summary
    Navas Kani or MP Anwar Rajha chance to contest in Ramnad Constitution
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X