சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பல வருடமாக கஷ்டப்பட்டு வேலை செஞ்சதெல்லாம் வீணாகிடுச்சே.. கமல் மீது கடும் கோபத்தில் நாம் தமிழர்

Google Oneindia Tamil News

சென்னை: தன் கட்சி தோற்றதை விட கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பலரும் முக்கியத்துவம் தருவது நாம் தமிழர் கட்சியினரை எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது. கட்சித் தலைவர் சீமானும் கூட இதை வார்த்தைகளால் வெளிப்படுத்தி வருகிறார். வாக்குகளை பெற போராட்டங்கள் தேவையில்லை என்றும் பிக்பாஸ் போதும் என்றும் சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சிறப்பான வாக்கு ஆதரவைப் பெற்றுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் மக்கள் நீதி மய்யம் வந்துள்ளது. நாம் தமிழர் கட்சி பல வருடங்களாக கடுமையாக உழைத்து சேகரித்து வந்த வாக்கு வங்கி இது. ஆனால் கட்சி ஆரம்பித்த 14 மாதங்களில் மக்கள் நீதி மய்யம் நாம் தமிழருக்கு கிட்டத்தட்ட இணையான ஆதரவைப் பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

2011ம் ஆண்டு கட்சி ஆரம்பித்த சீமான் இந்த முறை பெருந்தலைகளான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரை எதிர்கொண்டவர். இப்போது இவரக்ள் இல்லாத சூழலை சிறப்பாக பயன்படுத்த திட்டமிட்டு கடுமையாக உழைத்து வந்தார். இதற்காக திட்டமில்களை சிறப்பாக செய்தார். எளியவர்களை வேட்பாளர்களை நிறுத்தினார். சாமானியர்களை கவரும் வகையில் விவசாயி சின்னத்தையும் பெற்றார்.

"தலைவா.. நீங்க விலக கூடாது".. ராகுலுக்கு ஆதரவாக பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்கள்!

நாம் தமிழருக்கு வரவேற்பு

நாம் தமிழருக்கு வரவேற்பு

மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீட்டை பின்பற்றி வேட்பாளர்களை அறிவித்தார். முஸ்லீம்களுக்கும் பிரநிதித்துவம் அளித்தார். பிரச்சாரமும் பாராட்டும்படியாகவே இருந்தது. இதனால் நாம் தமிழர் கட்சிக்கு பொதுமக்களிடம் வரவேற்பும் இருந்தது. ஆனால் மக்களவை தேர்தல் முடிவுகள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி எதையும் கொடுக்கவில்லை.

கமல் மீது வருத்தம்

கமல் மீது வருத்தம்

நல்லதொரு வாக்கு வங்கியை நாம் தமிழர் கட்சி பெற்று, அது வளர்ச்சிப் பாதையில் இருப்பதை நிரூபித்துக் காட்டியுள்ளது. இது மிகப் பெரிய சாதனையாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் சந்தோஷப்பட வேண்டிய நேரத்தில் சீமான் கடும் வருத்தில் இருக்கிறார். இதற்கு காரணம் கமல் ஹாசன். கமல் திடீரென ஆரம்பித்த கட்சியால் தங்களுக்கு வரவேண்டிய ஓட்டுக்கள் அவருக்கு போய்விட்டது என சீமான் நம்புகிறார்.

கமல் மீது பாய்ந்த சீமான்

கமல் மீது பாய்ந்த சீமான்

திரைத்துறையினர் மீது மக்களுக்கு மோகம் இருப்பதை கண்டு தனது வேதனையை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் அவர் தேர்தல் முடிந்த உடனே கமல் மீது தான் பாய்ந்தார். அதாவது அண்மையில் பேட்டி அளித்த சீமான், வெள்ளையாக இருக்கிறவன் நல்லவன் என்று நினைத்து கமலுக்கு மக்கள் வாக்களித்துவிட்டதாக விமர்சித்து இருந்தார் கடுமையாக உழைத்தும் பலன் இல்லாமல் போனதற்கு தேர்தல் நியாயமாக நடைபெறாததே காரணம் என்றும் சீமான் கூறியிருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி போதும்

பிக்பாஸ் நிகழ்ச்சி போதும்

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க திரும்ப போய் விட்டர் நடிகர் கமல்ஹாசன். அந்த நிகழ்ச்சியின் மூலம் தனது கருத்துக்களை பரப்பியும் வருகிறார் கமல் ஹாசன். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், தமிழ்நாட்டில், வாக்குகளைப் பெற போராட்டங்கள் நடத்த தேவையில்லை என்றும், பிக்பாஸ் நிகழ்ச்சி ஒன்றே போதும் அதைத்தான் இந்த தேர்தல் முடிவுகள் கட்டுகிறது என வேதனை தெரிவித்தார். தமிழ்நாட்டு மக்கள் இன்னும் திரை மோகத்திலிருந்து மீளவில்லை என்றும் கமலை மறைமுகமாக விமர்சித்தார்.

ஆனாலும் எதைக் கண்டும் அஞ்சாமல் தொடர்ந்து தங்களது பணிகளில் நாம் தமிழர் கட்சியினர் இறங்கியுள்ளனர். அவர்களது அடுத்த இலக்கு தமிழக சட்டசபைத் தேர்தல் என்பதால் இடையில் வரும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் களமாடலைத் தொடங்கியுள்ளனர்.

English summary
seeman angry over kamal haasan for makkal needhi maiam get 5th place, and naam tamilar get 4th place in lok sabha elections 2019
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X