சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த ஆணையிட சீமான் மீண்டும் வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

சென்னை: தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த ஆணையிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு பிப்ரவரி 5-ந் தேதி நடைபெற உள்ளது. இக்குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் என்று தமிழறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 Seeman appeals to TN Govt to conduct consecration of Thanjavur Temple in Tamil

இக்கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சையில் இன்று தமிழ்வழி குடமுழுக்கு மாநாடு நடைபெற உள்ளது. இதில் ஏராளமான தமிழறிஞர்கள் பங்கேற்கின்றனர்.

இதனிடையே தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஆயிரமாண்டுகளாக உள்ள நடைமுறையை எப்படி மாற்றுவது? தமிழில் குடமுழுக்கு குறித்து தமிழறிஞர்களின் கருத்துக்கள் கேட்கப்படும் எனவும் கூறியிருந்தார்.

மக்கள் கருத்தை பற்றி கவலைப்படாமல் ஹைட்ரோ கார்பன் திட்டம்: கனிமொழிமக்கள் கருத்தை பற்றி கவலைப்படாமல் ஹைட்ரோ கார்பன் திட்டம்: கனிமொழி

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாடு அரசே! தமிழ்ப் பேரரசன் இராசராசசோழன் கட்டிய தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயிலுக்கு தமிழில் - தமிழர் மரபுப்படி திருக்குடமுழுக்கை நடத்த ஆணையிடுக என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Take a Poll

English summary
Naa Tamilar Cheif Co-ordinator Seeman has appealed to TN Govt to conduct consecration of Thanjavur Temple in Tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X