சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மருத்துவ படிப்பில் ஓபிசி வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு கேட்டு ஒருமித்த குரல் கொடுப்போம் - சீமான்

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி மருத்துவப்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை நிலைநிறுத்த ஒன்றுபட்டு ஒருமித்துக் குரல் கொடுப்போம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கி

Google Oneindia Tamil News

சென்னை: வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி மருத்துவப்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை நிலைநிறுத்த ஒன்றுபட்டு ஒருமித்துக் குரல் கொடுப்போம் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைப்பு விடுத்துள்ளார். மண்ணின் மக்களின் ஒருமித்த எதிர்ப்புக்குரலானது மத்திய, மாநில அரசுகளுக்கு மட்டுமின்றி நீதிமன்றத்தின் காதுகளிலும் எட்டி, சமூக நீதிக்கான கதவுகளைத் திறக்கும் சாவியாக அமைய வேண்டும் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி திராவிடர் கழகம், திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கக் கோரி தொரடப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 8ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகவும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் 27 % இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.

Seeman calls protest OBC reservation case

இந்த நிலையில் அறப்போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளார் சீமான். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது: மருத்துவ மேற்படிப்புகளில் அகில இந்தியத்தொகுப்புக்கு தமிழக அரசு வழங்கும் மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மொத்தமாய் புறக்கணிக்கப்பட்டிருப்பது நாடெங்கும் பெரும் கொந்தளிப்பையும், எதிர்ப்பலையையும் உருவாக்கியிருக்கிறது.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியதன் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த பிற கட்சிகள் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான உரிய இட ஒதுக்கீட்டை முறையாக வழங்க மத்திய அரசிற்கு உத்திரவிடக்கோரி வழக்கினைத் தொடர்ந்துள்ளன. அதன் தீர்ப்பு விரைவில் வெளியாகவிருக்கும் சூழலில் நாடே அதனை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.

முற்பட்ட வகுப்பினருக்கான பத்து சதவீத பொருளாதார இட ஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்பட்டு உரிய முறையில் தொடர்ந்து வழங்கப்படும்போது இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் இடஒதுக்கீடு பொருந்தாது எனக்கூறி, வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமையை மத்திய அரசு மறுத்து வருவது மாபெரும் சமூக அநீதி; இது பிறப்பின் வழியே பேதம் கற்பிக்கும் வருணாசிரம தர்மத்தை நிலைநிறுத்தும் மனுநீதி.

கடந்த 2007 ஆம் ஆண்டு மத்தியில் ஆண்ட அன்றைய திமுக - காங்கிரசு கூட்டணி அரசு, இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தவறியதிலிருந்து தற்போது அதிமுக - பாஜக கூட்டணிவரை அதனை மறுத்து வருவதும் அநீதியை அரங்கேற்றி வருவதும் வன்மையான கண்டனத்திற்குரியது. மத்தியில் ஆளும் அரசுகள் நிகழ்த்தும் இந்த மானுட அநீதியை எதிர்த்து குரல் கொடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் முழுமுதற்கடமையாகும்.

என்ன வேண்டுமானாலும் நடக்கும்.. தயாராக இருங்கள்.. ராஜ்நாத் சிங் அனுப்பிய மெசேஜ்.. ஆக்சனுக்கு ரெடி!என்ன வேண்டுமானாலும் நடக்கும்.. தயாராக இருங்கள்.. ராஜ்நாத் சிங் அனுப்பிய மெசேஜ்.. ஆக்சனுக்கு ரெடி!

ஆகவே, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் வருகிற ஜூலை 27 ஆம் தேதி உயர்நீதிமன்ற அளிக்க இருக்கிற தீர்ப்பில் சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, 'அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கம்' சார்பில் இன்று ஜூலை 26ஆம் தேதி முன்னெடுக்கப்படும் அறப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என அன்போடு அறிவுறுத்துகிறேன்.

Recommended Video

    Jothimani Question To Rajinikanth | OBC Reservation |kandhaSastiKavasam Issue

    அதன்படி இன்று காலை 11 மணியளவில் அவரவர் வீட்டுவாசலில் சமூக இடைவெளியோடு கோரிக்கை முழக்கங்களைத் தாங்கிய பதாகைகளைக் கையிலேந்தி தங்கள் எதிர்ப்பினை அறவழியில் உலகிற்குக் காட்ட வேண்டும் எனவும், மண்ணின் மக்களின் ஒருமித்த எதிர்ப்புக்குரலானது மத்திய, மாநில அரசுகளுக்கு மட்டுமின்றி நீதிமன்றத்தின் காதுகளிலும் எட்டி, சமூக நீதிக்கான கதவுகளைத் திறக்கும் சாவியாக அமைய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Medical Council of India detained changes for Medical student admission. Madras High Court will be passing orders on July 27. Seeman, the chief co-ordinator of the Naam Tamil Party, has called for a united voice to emphasize class representation and to establish reservation for other backward classes in medical education.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X