சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜேஎன்யு மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்.. நாட்டுக்கே தலைகுனிவு.. சீமான் கண்டனம்

Google Oneindia Tamil News

Recommended Video

    செய்தி தெரியுமா | 06-01-2020 | Morning News | oneindia tamil

    சென்னை: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியிருப்பது நாட்டுக்கே ஏற்பட்ட பெரும் தலைகுனிவாகும்.

    டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சபர்மதி விடுதிக்குள் நேற்று இரவு ஆயுதங்களுடன் முகமூடி அணிந்த சிலர் உள்ளே நுழைந்து விடுதியை அடித்து நொறுக்கியுள்ளனர்.

    Seeman condemns brutal attack on students in Jawaharlal Nehru university

    இதில் மாணவர் சங்க தலைவரான ஆயிஷ் கோஷின் மண்டை உடைந்தது. மேலும் பல மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சபர்மதி விடுதிக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த முகமூடி அணிந்த சமூகவிரோதிகள் மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

    விஜயலட்சுமி பதவி ஏற்க எதிர்ப்பு.. கடலூரில் ஊரே திரண்டு போராட்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு.. விஜயலட்சுமி பதவி ஏற்க எதிர்ப்பு.. கடலூரில் ஊரே திரண்டு போராட்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு..

    இது ஒட்டுமொத்த நாட்டுக்கே ஏற்பட்ட பெரும் தலைகுனிவாகும். விடுதி கட்டண உயர்வு தொடங்கி குடியுரிமைச் சட்டத்திருத்தம் வரை அநீதிக்கெதிராக களத்தில் சமரசமற்று நிற்கும் மாணவப்பிள்ளைகளுக்கு ஆளும்வர்க்கத்தால் நேரடியாக விடப்பட்டிருக்கிற கொலைமிரட்டல்; அச்சுறுத்தல்!

    தாக்குதலில் ஈடுபட்ட கொடுங்கோலர்களை உடனடியாக கடுஞ்சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும் என்றார் சீமான்.

    English summary
    Naam Tamilar movement organiser Seeman condemns brutal attack on students in Jawaharlal Nehru university. Its a shame to our nation.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X