சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாங்கள் பாரத மாதாவின் பிள்ளைகள் அல்ல.. பாரத மாதா கீ ஜே என சொல்ல முடியாது: சீமான்

Google Oneindia Tamil News

சென்னை: நாங்கள் பாரத மாதாவின் பிள்ளைகள் அல்ல; பாரத மாதா கீ ஜே என சொல்ல முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி செய்தியாளர்களை சீமான் சந்தித்தார்.

Seeman condemns Dharmendra Pradhans Bharat Mata Ki Jai row

அப்போது, பாரத மாதா கீ ஜே என்பவர்களே இந்தியாவில் வாழ முடியும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். இது தொடர்பாக சீமானிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்:

நாங்கள் பாரத மாதாவின் பிள்ளைகள் அல்ல. தமிழ்த் தாயின் பிள்ளைகள் நாங்கள். எங்களால் பாரத் மாதா கீ ஜே என சொல்ல முடியாது. இந்த நிலம் நாடாவதற்கு முன்பே பன்னெடுங்காலமாக வாழ்கிறவர்கள் நாங்கள்.

பெருந்தேசிய இனமான தமிழ்த் தேசிய இனத்து பிள்ளைகல் நாங்கள். இந்தியா எங்களது தேசமும் அல்ல. எங்களது தேசம் தமிழ்தேசம். நாங்கள் இந்தியா என்கிற நாட்டின் குடிமக்கள்.

குஜராத்: அம்ரேலியில் மகாத்மா காந்தி சிலையை உடைத்த சமூக விரோதிகள்குஜராத்: அம்ரேலியில் மகாத்மா காந்தி சிலையை உடைத்த சமூக விரோதிகள்

ஆங்கிலேயர்களால் ஒன்றிணைக்கப்பட்ட மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா. இது மாநிலங்களின் ஒன்றியம் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். இதைத்தான் ராஜ்யசபாவில் ப. சிதம்பரமும் சுட்டிக்காட்டி பேசினார்.

பிரதேசங்களின் உரிமைகளை மதிக்காமல் செயல்பட்டால் உள்நாட்டு யுத்தத்தையே நீங்கள் சந்திக்க வேண்டும். அது தவிர்க்க முடியாதது. அதை நோக்கி மத்திய அரசு தள்ளிவிடாமல் இருப்பதுதான் தேச ஒற்றுமைக்கு நல்லது.

இவ்வாறு சீமான் கூறினார்.

English summary
Naam Thamizhar Parti Chief-Co Ordinator Seeman has oppoese tthat the Union Minister Dharmendra Pradhan's comments with Bharat Mata Ki Jai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X