சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டம்: கோலம் போட்டவர்களை கைது செய்வதா? சீமான் கடும் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக கோலம் போட்டு போராட்டம் நடத்தியவர்களை கைது செய்ததற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை பெசன்ட் நகரில் கோலம் போட்டு மத்திய அரசுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

Seeman condemns police arrested Women for drawing Kolam against CAA

கோலம் போட்டு போராட்டம் நடத்தியவர்களை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இக்கைது நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலர் வைகோ, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது ட்விட்டர் பக்கத்தில், கொலை செய்தவர்களையும், பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட கொடுங்கோலர்களையும் விட்டுவிட்டு கோலமிட்டவர்களைக் கைது செய்துள்ளது அரசு!

அடடா இதுதான் இந்தியாவின் தலைசிறந்த நிர்வாகம்! என கண்டனம் தெரிவித்துள்ளார்.

மனம் தளரவில்லை.. மாஸ் பிளான் போட்ட இஸ்ரோ.. அடுத்த வருடமே விண்வெளிக்கு ரோபோ.. ககன்யான் அப்டேட்! மனம் தளரவில்லை.. மாஸ் பிளான் போட்ட இஸ்ரோ.. அடுத்த வருடமே விண்வெளிக்கு ரோபோ.. ககன்யான் அப்டேட்!

English summary
Naam Thamizhar Party Chief co ordinator Seeman has condemned that the police arrested Women for drawing Kolam against CAA in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X