சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சசிகலாவை சந்தித்த சீமான்.. கடைசியில் எடுத்த "தில்" முடிவு.. 7-ம் தேதி இருக்கு கிளைமேக்ஸ்!

சீமான் தனித்து போட்டி என்பது இன்று மேலும் நிரூபணமாகி உள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலாவை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சீமான் சந்தித்து பேசிய நிலையில், இன்று தன் தரப்பு முடிவை தெளிவுபடுத்திவிட்டார் சீமான்.. நிலவி வந்த மொத்த வதந்திகளுக்கும் தீர்க்கமாக பதிலளித்து விட்டார்..!

ஜெயலலிதா பிறந்த நாள் அன்று, சசிகலா சில முக்கிய நபர்களை சந்தித்தார்.. பாரதிராஜாவும், அமீரும் ஏன் போய் சந்தித்து பேசினார்கள் என்பது தெரியவில்லை... ஆனால், சரத்குமாரும், சீமானும் பேசியதுதான் பரபரப்பாக பேசப்பட்டது.

இதில் சரத்குமார் சந்திப்பை கூட ஒருவகையில் கணிக்கலாம்.. அதிமுக கூட்டணியில் இருப்பவர், ஒரு சீட், 2 சீட் தந்தால் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்று பிடிவாதம் காட்டி கொண்டிருப்பவர், அதனால் சசிகலாவை சந்தித்து, ஒருவகையில் அமமுகவுடன் இணைவதற்கான அச்சாரமாக இருக்கலாம் அல்லது அதிமுகவுக்கு ஒரு கலக்கத்தை ஏற்படுத்தக்கூடிய செயலாகவும் இருக்கலாம்.

கொஞ்சம் கூட யோசிக்கல.. பள்ளி மாணவியுடன் கொஞ்சம் கூட யோசிக்கல.. பள்ளி மாணவியுடன் "தண்டால்" கோதா! மின்னல் வேக ராகுல் காந்தி.. வியந்துபோன குமரி

சரத்குமார்

சரத்குமார்

ஆனால், எதிர்பாராதது சீமான்தான்.. இவர் ஏன் அங்கே போனார்? திராவிட கட்சிகளுக்கு மாற்று தான் தான் என்று 10 வருஷமாக சீறி கொண்டிருப்பவர், ஊழலுக்கு எதிராக கொள்கையை முன்னிறுத்தி வருபவர், ஏ1 பிறந்த நாளில், ஏ2-வை ஏன் சந்தித்தார்? என்பதுதான் அதிர்ச்சியாகவே இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்துள்ளது.. சரத்குமார், பாரதிராஜா எல்லாரும் செய்தியாளர்களை சந்தித்தனர் என்றால், சீமான் அப்படி யாரையும் சந்திக்கவில்லை...

பாஜக

பாஜக

நலன் விசாரிப்புகள் முடிந்துவிட்டு, அரசியல் ரீதியாகவும் இவர்கள் பேசியதாக தெரிகிறது.. அப்போது ஒரே ஒரு கோரிக்கையைதான் சீமான் வைத்தாராம்.. பாஜக எதிர்ப்பு என்பதில் மட்டும் உறுதியாக இருங்கள்.. எப்போதுமே பாஜகவால் அதிமுக, அமமுகவுக்கு ஆபத்து இருக்கிறது.. அதனால், ஆதரவு நிலைக்கு மட்டும் அந்த கட்சியுடன் சேர வேண்டாம் என்று சீமான் கேட்டுக் கொண்டதாகவும், சசிகலா இதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை என்றும் தகவல்கள் கசிந்தன. அந்த வகையில் சசிகலாவுடன் கூட்டணி இல்லை என்பதும், அவருக்கு ஆதரவு இல்லை என்பதும் அப்போதே தெரிந்துவிட்டது... தெளிவாகிவிட்டது.

கமல்

கமல்

மற்றொரு புறம், கமல் சீமானை விடாமல் விரட்டி கொண்டிருந்தார்.. நாம் தமிழருடன் கூட்டணி வைப்பதற்கு கமலுக்கு விருப்பம் இருந்தாலும், சீமான் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்றே தெரிகிறது.. ஒருவேளை 2 மாசத்துக்கு முன்பே அதாவது, இது தொடர்பான பேச்சுக்கள் ஆரம்பமானபோதே, சூட்டோடு சூட்டாக, மய்யத்துடன், நாம் தமிழர் கட்சி கூட்டணி வைத்திருக்கலாம்.. இதில் திமுக இடையில் வந்துவிட்டது.. கமலுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்துவது தெரிந்ததுமே சீமான் நழுவி கொண்டார்.. இப்போது கமலுக்கு திமுக பக்கமும் இல்லை, சீமான் பக்கமும் இல்லை என்ற நிலை உள்ளது..

 லிஸ்ட் ரெடி

லிஸ்ட் ரெடி

எனவே, ஆரம்பத்தில் இருந்தே சீமான் தனித்து போட்டி என்பதில்தான் உறுதியாக இருக்கிறார்.. நேற்று வரை சீமான் ஒருவேளை யாருடனாவது கூட்டணி வைப்பாரோ என்ற யூகம் இருந்தது.. இன்று மொத்தமும் கிளியர் ஆகிவிட்டது.. 234 வேட்பாளர்களின் லிஸ்ட்டையும் ஒரே மேடையில் வரும் 7-ம் தேதி அறிவிக்க போவதாக இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அத்தனை வேட்பாளர்களையும் அதே மேடையில் அறிமுகம் செய்து வைக்கவும் போகிறாராம்.. சிங்கம் சிங்கிளாகத்தான் வரும் என்று ஏற்கனவே பலமுறை கர்ஜித்தவர் சீமான்.. அதைதான் இன்றைய சீமானின் அறிக்கை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது..

English summary
NTK party has decided to contest alone without any alliance and Seeman will announce all 234 candidates in Chennai meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X