சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குடியரசு தினத்தில் விவசாயிகள் மீதான டெல்லி போலீஸ் கொடூர தாக்குதல்- சீமான், தினகரன் கடும் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: டெல்லியில் விவசாயிகள் மீதான போலீசாரின் தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கை:

மத்தியில் ஆளும் பாஜக அரசு, வேளாண் சட்டங்களுக்கெதிராக டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் வாகனப்பேரணியில் காவல்துறையின் மூலம் அடக்குமுறையை ஏவி, வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.

Seeman, Dhinakaran condemn Delhi Police attack on Farmers

மக்களாட்சி நாடாகப் பேரறிவிப்புச் செய்யப்பட்ட இந்நாளில், மக்கள் மீதே அரச வன்முறையையும், கொடுந்தாக்குதலையும் நிகழ்த்தியிருப்பது வெட்கக்கேடானது.

விவசாய நாடு என அண்ணல் காந்தியடிகளால் கொண்டாடப்பட்ட இந்நாட்டில், குடியரசு தினம் நாடெங்கும் நினைவுகூறப்படுகிற இவ்வேளையில் விவசாயப் பெருங்குடிகள் மீது ஏவப்படும் அரசப்பயங்கரவாதத்தின் மூலம் சர்வதேசச் சமூகத்தின் முன்பு இந்தியா, அவமானத்தின் சின்னமாய் மாற்றி நிறுத்தப்பட்டிருக்கிறது.

சொந்த நாட்டின் குடிகளையே துளியும் மதித்திடாதப் போக்கின் மூலம் நாட்டைத் தலைகுனியச் செய்து விவசாயிகளை நிலைகுலையச் செய்திருக்கும் பாஜக அரசின் ஆட்சியாளர்கள்தான் உண்மையான தேசத்துரோகிகள் என்பதை உலகம் உணர்ந்துகொள்ளட்டும்!

டிவிட்டரில் தினகரன் வெளியிட்ட பதிவு:

டெல்லியில் விவசாயிகள் மீதான காவல்துறையினரின் நடவடிக்கைகள் கண்டனத்துக்குரியவை. நாட்டின் குடியரசு தினத்தில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவது மிகுந்த வருத்தமளிக்கிறது.

விவசாயிகளின் பிரச்னைக்கு அமைதிவழியில் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் மத்தியஅரசு ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

English summary
Naam Tamilar Chief Seeman and AMMK General Secretary TTV Dhinakaran had condemned the delhi Police attack on Protesting Farmers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X