• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

சீமான் ஆமைக்கறி கதை சுத்த பொய்.. பிரபாகரனை சந்தித்ததே 2 நிமிடம்தான்.. கொந்தளிக்கும் வைகோ

Google Oneindia Tamil News

சென்னை: "பிரபாகரனை சீமான் 2 நிமிஷம்கூட சந்திக்கவில்லை.. எல்லாம் சுத்த பொய்.. ஆமைக்கறி சாப்பிட்டேன், மாட்டுக்கறி சாப்பிட்டேன், ஆட்டுக்கறி சாப்பிட்டேன் இதெல்லாம் சொன்னது பொய்.. புலிகள் எல்லாம் சீமான் மீது கடும் கோபத்தில் இருக்காங்க" என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாம் தமிழர் கட்சி சீமான் ஆமைக்கறி சாப்பிட்டேன், ஏகே 47 சுட்டேன் என்ற வாதங்களை அடிக்கடி பொதுவெளியில் முன்வைப்பார்..

பல பேட்டிகளில் இதை அவரே வெளிப்படையாக பேசியிருக்கிறார்.. இது இப்போது வரை சோஷியல் மீடியாவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

கால்களை இழந்து ஒரே இடத்தில் முடங்கிய இளைஞர்.. செயற்கை கால்களை பொருத்த உதவிய தருமபுரி எம்பி! கால்களை இழந்து ஒரே இடத்தில் முடங்கிய இளைஞர்.. செயற்கை கால்களை பொருத்த உதவிய தருமபுரி எம்பி!

 பேட்டி

பேட்டி

இதுகுறித்து ஒருமுறை சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, "நான் 8 நிமிடம் மட்டுமே விடுதலை புலிகளுடன் இருந்தேன்... அதை மறுக்க வேண்டும் என்றால் விடுதலை புலிகள்தான் மறுக்க வேண்டும்... என்னை குற்றம் சாட்டுபவர்கள் அதை பார்த்தார்களா? அவர்களுடன் பயணம் செய்தவன் நான்... நான்தான் நடந்ததை சொல்ல வேண்டும். நான் ஏகே 74 சுட்டேன்... ஆமைக்கறி சாப்பிட்டேன்" என்றார். அதுமட்டுமல்ல, இறுதி போர்கட்டத்திலே புலிகள் சாம்பார், கூட்டு, பொறியல் செஞ்சாங்க.. கறி வறுத்து கொடுத்து தான் சாப்பிடுவதை குறிப்பெடுத்து கொண்டேன் என்று மீண்டும் ஒருமுறை பேசி பரபரப்பையும் சர்ச்சையும் கிளப்பினார் சீமான்.

 வைகோ

வைகோ

இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் பதிலளித்திருந்தார்.. காரணம், வைகோவும் சீமானும், தமிழர் நலன் என்கிற விஷயத்தை மையமாக வைத்தே அரசியல் செய்து வருபவர்கள்.. 2 பேருமே விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக அறியப்படுகிறவர்கள்.. அதனால்தான் வைகோவை சீண்ட ஆரம்பித்தார் சீமான்.. "வைகோ தமிழர்களுக்காக குரல் கொடுத்ததை மறுக்கவில்லை.... ஆனால் அவரை தமிழராக ஏற்க முடியாது" என்று கூறியிருந்ததை மறுக்க முடியாது. அப்போதிருந்தே இருவருக்கும் உரசல்கள் இருந்து கொண்டுதானிருக்கிறது.

 கொந்தளிப்பு

கொந்தளிப்பு


ஆனால், சீமான் எத்தனையோ முறை வைகோவை விமர்சித்தாலும், வைகோ சீமானை கண்டுகொண்டதில்லை.. பலமுறை செய்தியாளர்கள் கேள்வி கேட்டாலும், அதை பற்றி பதிலளிக்க மறுத்துவிடுவார்.. ஆனால், ஒரே ஒருமுறை மட்டும் சீமானுக்கு எதிராக மதுரை கூட்டம் ஒன்றில் வெளிப்படையாக கொதித்தார் வைகோ.

 புலிகள்

புலிகள்

"என்னை தமிழன் இல்லை தெலுங்கன் என்று சீமான் பேசுகிறார்.. என்னைப் பற்றி மீம்ஸ் போட்டுட்டே இருக்காங்க.. புலிகளுடைய கொடியை தன்னுடைய சின்னமாக்கி, பிரபாகரனுடன் பல நாள் இருந்ததாகவும், வேட்டைக்கு போனதாகவும், ஆமைக்கறி சாப்பிட்டதாகவும் கோயபல்ஸ்கூட சொல்ல முடியாத பொய்யை சொன்னார்... போட்டோ எடுக்க அனுமதிக்கவில்லை... அந்த போட்டோவை கிராபிக்ஸில் பண்ணிக்கிட்டாங்க" என்று கூறியிருந்தார். இதற்கு நாம் தமிழர் கட்சியும் எதிர்வினையாற்றியது.

 நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி

இப்படி மதிமுகவும், நாம் தமிழர் கட்சியும் தொடர்ந்து உரசல் மோதலில் இப்போது வரை இருந்து வருகின்றன.. கடந்த வாரம்கூட வைகோ பேசும்போது, "விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தது கிடையாது. தமிழர்களுக்காக ஒன்றுமே செய்யாதவர் சீமான். அவரை நம்பி இளைஞர்கள் ஏமாற வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டார்.

 எல்லாம் பொய்

எல்லாம் பொய்

சில தினங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் திமுகவில் இருந்து வைகோ நீக்கப்பட்டபோது தீக்குளித்து இறந்த தண்டபாணி, உதயன், ஜஹாங்கீர் உள்ளிட்ட 5 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற வைகோ, சீமானை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். அந்த வீடியோவில் வைகோ பேசும்போது, "பிரபாகரனை சீமானை சந்தித்தது மொத்தமே 2 நிமிஷம்தான்.. ஆமைக்கறி சாப்பிட்டேன் என்று சொல்வதெல்லாம் சுத்த பொய்.. புலிகள் அவர் மீத கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.. ஒருநிகழ்ச்சியில் பேசிய வைகோ, "பிரபாகரனை 2 நிமிஷம்கூட சந்திக்கவில்லை.. எல்லாம் பொய்.. ஆமைக்கறி சாப்பிட்டேன், மாட்டுக்கறி சாப்பிட்டேன், ஆட்டுக்கறி சாப்பிட்டேன் இதெல்லாம் சொன்னது பொய்.. அவங்கல்லாம் புலிகள் கடும் கோபத்தில் இருக்காங்க..

பணம்

பணம்

எல்லா இடத்திலும் புலிகள் பற்றியும், பிரபாகரன் பற்றியும் பேசி ஒன்றும் தெரியாத அந்த இளைஞர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார் சீமான்.. ஸ்டெர்லைட்டில் வைகோ பணம் வாங்கிட்டார்.. இப்போ நியூட்ரினோ விவகாரத்தில் வைகோ மகன் பணம் வாங்கிட்டாரு என்று சொல்லி அவரது ஆட்களை வைத்து வீடியோ பேச வைத்தார்... அன்னைக்கே சிவகாசியில் என் ரவி, எனக்காக, என் குடும்பத்துக்காக தீக்குளித்து இறந்துபோனான்..

 வைரல்

வைரல்

அந்த குடும்பத்தை நான் காப்பாத்தியிருக்கேன்.. படிக்க வெச்சிருக்கேன்.. மாதா மாதம் அந்த குடும்பத்துக்கு செலவுக்கு நான் பணம் தந்திருக்கேன்.. இப்படி இவ்வளவு கேவலமாக வீடியோக்களை போடறாங்களேன்னு சொல்லி என் மனைவியின் அண்ணன் மகன் சரவணசுரேஷ், தீக்குளிச்சு அவனும் இறந்து போனான்.. என் குடும்பம் ஒரு உயிரை இன்று இழந்துவிட்டது" என்று பேசியுள்ளார்.. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

English summary
Seeman didnot meet Prabhakaran Even two mins and tamils youth should not trust him, says Vaiko
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X