சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தன் வினை தன்னை சுடும் ராஜா.. மு.க.ஸ்டாலினை போட்டு தாக்கிய சீமான்

வடசென்னை பிரச்சார கூட்டத்தில் முக ஸ்டாலினை சீமான் விமர்சனம் செய்தார்.

Google Oneindia Tamil News

சென்னை: "கிருஷ்ணர் படத்தை வெச்சி ஓட்டு கேட்கிற நிலைமைக்கு திமுக வந்துடுச்சு" என்று சீமான் காட்டமாக விமர்சித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய பிரச்சார மேடைகளில் பாஜகவை எவ்வளவு விமர்சிக்கிறாரோ அதே அளவு திமுகவையும் கேள்வி கேட்டு குடைந்து எடுத்து வருகிறார். குறிப்பாக திமுக தலைவரின் பேச்சு, பாவனை, செயல்பாடுகள் குறித்தும் நிறையவே விமர்சித்து வருகிறார். சமீபத்தில் பிரச்சார கூட்டத்தில் பேசியபோது சொன்னதாவது:

Seeman has criticized MK Stalin and Veeramani

"இந்த திராவிட கட்சிகளுக்கு வேற வேலையே கிடையாது. முற்போக்கு பேசறது, கேடுகெட்ட பிற்போக்குத்தனத்தை செயல்படுத்துறதுன்னு இதேதான் வேலை. ஐயா வீரமணி எங்கோ ஒரு இடத்துல கிருஷ்ணரை தப்பா, விமர்சித்து பேசிட்டார்.

நானும் 15 வருஷங்களுக்கு பெரியார் இயக்கத்தில் இருந்தபோது, சாதி மதத்துக்கு எதிரா பேசினேன். ஆனா எனக்கு ஓட்டு போடக்கூடாதுன்னு இவங்க என்ன பண்ணாங்க தெரியுமா? நான் பேசினதையே வெட்டி வெட்டி.. துண்டு துண்டு காணொளியா ஆக்கி எல்லாருக்கும் அனுப்பி, என்னை ஒழிச்சிட்டாங்க.

தஞ்சை தொகுதியில் தலைவிரித்தாடும் கோஷ்டி பூசல்.. சிக்கலில் திமுக தஞ்சை தொகுதியில் தலைவிரித்தாடும் கோஷ்டி பூசல்.. சிக்கலில் திமுக

ஆனா இன்னைக்கு வீரமணி பேசி வெச்சிருக்காரே.. இதுக்கு இப்போ நீங்க என்ன செய்ய போறீங்க? விளக்கம் அங்க இருந்து என்னன்னு வருது தெரியுமா? "கிருஷ்ணரை வீரமணி பேசியிருக்ககூடாது.. அது திமுக மேடை இல்லை.. உள்நோக்கத்துடன் வீரமணி பேசவில்லை. என் மனைவிகூட தினம் கோயிலுக்கு போய் சாமி கும்பிடுகிறார். என் கட்சியில் 90 விழுக்காடு இந்துக்கள்தான்" இப்படி பேசிட்டு அவர் உட்கார்ந்திருக்கார்.

அது மட்டுமில்லை.. "பெரியார், அண்ணா" அதுக்கப்புறம் "கிருஷ்ணர்" இவங்க படத்தை வெச்சு ஓட்டு கேட்கிற நிலைமைக்கு இன்னைக்கு அவங்க வந்துட்டாங்க. தன் வினை தன்னை சுடும் ராஜா!" என்று ஸ்டாலினை போட்டு தாக்கினார்.

English summary
In North Chennai Seeman campaigned for Kaaliammal and criticized MK Stalin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X