சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அண்ணா பல்கலை.யில் ‘பேதம் கற்பிக்கும்’ பகவத் கீதையை பாடமாக்குவதா?: ஸ்டாலின், சீமான் எதிர்ப்பு

Google Oneindia Tamil News

சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தில் பகவத் கீதை தத்துவவியல் பாடத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:

அண்ணா பல்கலைக்கழகத்தின் CEG கேம்பசில் 2019-ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில், தத்துவப் பாடம் கட்டாயமாக்கப்பட்டு, அதில், "இந்திய - மேல்நாட்டு தத்துவப் படிப்பு" என்ற பெயரில் சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது!

Seeman Opposes Bhagavad Gita for engineering students in Anna University

#கீழடி அகழாய்வுகள் வெளியாகி, தொல்தமிழர்களின் - திராவிடப் பண்பாட்டின் தொன்மையையும் பெருமையையும் உலகம் அறிந்துள்ள நிலையில், தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதை உணர்ந்து, பல்கலைக்குப் பொறுப்பு வகிக்கும் ஆளுநரும், உயர்கல்வித்துறையும் இந்தப் பண்பாட்டு ஆதிக்கப் பாடத்திட்டத்தை மாற்றிடவேண்டும்

இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டிருக்கிறார்.

சீமான் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவு:

அண்ணா பல்கலைக்கழக இரண்டாமாண்டு பொறியியல் படிப்பில் தத்துவவியல் பாடத்திட்டத்தில் பகவத்கீதை இடம்பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. கல்வியைக் காவிமயமாக்கும் பாஜக அரசின் சதிச்செயலுக்கு அதிமுக அரசு பலியாகிவிட்டது என்பதையே இது காட்டுகிறது.

ஈராயிரம் ஆண்டுக்கு முன்பே அறம்பாடிய உலகப்பொதுமறை திருக்குறள் எனும் மானுடச் சாசனம் இருக்க, பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் பகவத் கீதையைச் சேர்ப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. இவ்வாறு சீமான் பதிவிட்டுள்ளார்.

English summary
Naam Thamizhar party Chief Co-ordinator Seeman has opposed to the Bhagavad Gita for engineering students in Anna University.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X