சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விழ விழ ஸ்டிராங்காக எழும் நாம் தமிழர் கட்சி.. முதல் ஆளாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட சீமான்

Google Oneindia Tamil News

சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. எந்த தேர்தல் ஆனாலும் முதலில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவது சீமான் கட்சியே ஆகும்.

Recommended Video

    Seeman Funny Speech | நடிப்பவனை நம்பும் சமூகம் | Oneindia Tamil

    தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுதத மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக பகுதிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் வரும் 22 ஆம் தேதி வரை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தேர்தலுக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    என்கிட்ட ஆட்சி இருந்தா.. ஒரே இரவில் சுங்கச்சாவடிகளை புல்டோசர் மூலம் அகற்றிடுவேன்.. சீமான் ஆவேசம்! என்கிட்ட ஆட்சி இருந்தா.. ஒரே இரவில் சுங்கச்சாவடிகளை புல்டோசர் மூலம் அகற்றிடுவேன்.. சீமான் ஆவேசம்!

    நாம் தமிழர் கட்சி

    நாம் தமிழர் கட்சி

    தேமுதிக, பாமக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. அது போல் நாம் தமிழர் கட்சியும் வழக்கமாக கடந்த கால தேர்தல்களை போல தனித்தே போட்டியிடுகிறது. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நடைபெறும் இந்த தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.

    சீமான் வெளியிட்ட அறிக்கை

    சீமான் வெளியிட்ட அறிக்கை

    இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிவிப்பில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு சுரேஷ்குமார் (வார்டு-3), ராயப்பன் (4), தனலட்சுமி (5), பவானி (6), ஜான்சிராணி (7), கவிமணி (8), வில்லியம்ஸ் (10), காஞ்சிபுரம் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு பாலமுருகன் (6).

    செங்கல்பட்டு

    செங்கல்பட்டு

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு ஜாபர் அலி (1), மணிவண்ணன் (2), செல்சந்திரன் (3), நிதா செல்வா (4), சுகுமார் (6), சசிகுமார் (7), உஷாராணி (8), பவானி (11), சுகுமாரியம்மன் (13), வேல்முருகன் (14), நந்தினி (15), ஆனந்தி (17), கோவிந்தராஜ் (18), சந்திரமோகன் (19), லலிதா (21), சதீஷ் (22).

    திருக்கழுக்குன்றம் ஒன்றிய கவுன்சிலர்

    திருக்கழுக்குன்றம் ஒன்றிய கவுன்சிலர்

    திருக்கழுக்குன்றம் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு தினேஷ் (2), அங்கம்மாள் (3), அன்பரசன் (5), ராஜா (6), நேதாஜி (7), தேவராஜ் (8), பூங்காவனம் (10), வினிதா (11), வெங்கடேசன் (13), அனிதா (20). இதேபோல், வேலூர், விழுப்புரம் மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறியுள்ளார்.

    தமிழக சட்டசபை தேர்தல்

    தமிழக சட்டசபை தேர்தல்

    மொத்தம் 27 ஆயிரத்து 3 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு தேர்தலுக்கும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சியை வரவழைக்கிறது.

    வீழ்ந்தாலும் எழும் சீமான்

    வீழ்ந்தாலும் எழும் சீமான்

    எத்தனை முறை தோற்றாலும் மீண்டும் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி குறித்து மக்கள் மனதில் நல்லதொரு எண்ணம் எழுந்துள்ளது. அதிலும் வேட்பாளர் பட்டியலில் அவர் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செய்வதும் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலிலாவது நாம் தமிழர் கட்சி சார்பில் யாருக்காவது வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    English summary
    Naam Tamilar Movement Seeman releases list of candidates who contest for Civic polls.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X