சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத யானைகளுக்கு மத்தியில் எதை பற்றியும் கவலைப்படாமல் மந்தகாசமாக நடைபோடும் நாம் தமிழர்!

Google Oneindia Tamil News

சென்னை: மத யானைகளுக்கு மத்தியில் எதை பற்றியும் கவலைப்படாமல் சந்தோஷமாக வீறு நடை போடும் நாம் தமிழர் கட்சி நாடாளுமன்றத் தேர்தலுக்காக முழு வீச்சில் பணியாற்றி வருகிறது.

நாம் தமிழர் கடந்த ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட அக்கட்சி பாஜகவை விட அதிக வாக்குகளை பெற்றது. இதன் வாக்கு சதவீதமும் உயர்வாக இருந்தது.

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள கட்சிகள் அனைத்தும் கூட்டணி பேச்சுவார்த்தை, களேபரங்களில் ஈடுபட்டு வந்தாலும் கூட நாம் தமிழர் கட்சி எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தங்கள் வேலையை சிறப்பாக செய்து வருகிறது.

40 தொகுதிகளிலும்

40 தொகுதிகளிலும்

40 நாடாளுமன்றத் தொகுதியிலும் தனித்து போட்டி என அறிவித்தார் சீமான். 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலும் தயார் என்றும் சீமான் ஒரு பேட்டியில் அறிவித்தார்.

முதல் வெற்றி

முதல் வெற்றி

திராவிடக் கட்சிகளுக்கு ஓட்டு போடாமல் எங்களுக்கு போடுங்கள். தமிழகத்தையே மாற்றி காட்டுகிறோம் என்பதே சீமானின் முழக்கம். தற்போது நடைபெறும் அரசியல் சதுரங்கங்களில் கலந்து கொள்ளாமல் தனித்து தில்லாக நிற்பதே நாம் தமிழர் கட்சியின் முதல் வெற்றியாகும்.

தயாராக

தயாராக

மண்டலம் வாரியாக தொகுதி கட்டமைப்பு கலந்தாய்வையும் நடத்தி வருகிறார். வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டது நாம் தமிழர் கட்சியின் அரசியல் எங்கள் முன்னவர்கள் செய்த தவறை நங்கள் செய்ய தயாராக இல்லை என்ற முழக்கத்தோடு எந்த வித தொகுதி பங்கீடு பஞ்சாயத்தும் இல்லாமல் அவர்பாட்டுக்கு நாடாளுமன்றத் தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தி வருகிறார்.

வாக்களிக்க

வாக்களிக்க

மதயானைகளுக்கு மத்தியில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தேர்தலுக்கு முழு வீச்சில் பணியாற்றி வருகின்றனர் நாம் தமிழர் கட்சியினர். அத்துடன் ஆங்காங்கே கூட்டங்களை நடத்தி நாம் தமிழர் கட்சிக்கு ஏன் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதையும் யாருடனும் கூட்டணி சேராதது ஏன் என்பது குறித்தும் சீமான் விளக்கி வருகிறார்.

English summary
Seeman's Naam Tamilar Party is in full fledge to contest in Loksabha elections 2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X