• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இவரு "காவி" கட்டின காங்கிரஸ்.. அவரு "கதர்" கட்டின பாஜக.. அவ்வளவுதான்.. சீமான் பளிச்!

|

சென்னை: "நாங்க பரம்பரை பரம்பரையா பொங்கல் கொண்டாடிட்டு இருக்கோம்.. அப்போவெல்லாம் வராத இந்த ஜேபி நட்டா, இந்த நொட்டா ராகுல்காந்தி, இன்னைக்கு ஏன் இங்கே வர்றாங்க? இவங்க எத்தனை முறை இங்கே வந்தாலும் சரி, ஒன்னும் ஆக போகறது இல்லை.. இவங்கள எல்லாம் உள்ளே வர்றதுக்காகவா, நாங்க இவ்ளோ பெரிய படையை கட்டிட்டு வேலை செய்றோம்?" என்று சீமான் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்ப்பேரினத்தின் பண்பாட்டுப் பெருவிழாவான பொங்கல் திருநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி - தலைமை அலுவலகத்தில் மகளிர் பாசறை சார்பாக பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த விழா முடிவில் அக்கட்சியின் தலைவர் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பல கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பும்போது அவைகளுக்கு சீமான் சொன்ன பதில்களின் சுருக்கம் இதுதான்:

விவசாயிகள்

விவசாயிகள்

"இந்த தேர்தலில் விவசாயிகளையே சின்னமாக வைத்து கொண்டு, நாங்கள் இந்த முறை தேர்தலை சந்திக்க இருக்கிறோம்.. தேசிய தலைவர்களான நட்டாவும், ராகுலும் பொங்கல் விழாவுக்கு இங்கு வர்றாங்களாமே.. இதற்கு காரணம் பொங்கல் இல்லை, தேர்தல் கிட்ட வருது.

 ஜேபி நட்டா

ஜேபி நட்டா

நாங்க பரம்பரை பரம்பரையா பொங்கல் கொண்டாடிட்டு இருக்கோம்.. அப்போவெல்லாம் வராத இந்த ஜேபி நட்டா, இந்த நொட்டா ராகுல்காந்தி, இன்னைக்கு ஏன் இங்கே வர்றாங்க? இவங்க எத்தனை முறை இங்கே வந்தாலும் சரி, ஒன்னும் ஆக போகறது இல்லை.. இவங்கள எல்லாம் உள்ளே வர்றதுக்காகவா, நாங்க இவ்ளோ பெரிய படையை கட்டிட்டு வேலை செய்றோம்?

 வாட்டாள் நாகராஜ்

வாட்டாள் நாகராஜ்

வாட்டாள் நாகராஜ் செய்தது மன்னிக்க முடியாதது.. என்னை மொழி வெறியன், இன வெறியன், பாசிஸ்ட்ன்னு சொல்றீங்களே.. ஆனால் என் எல்லையில் தாளவாடியில் இருக்கிற என் எழுத்தை, என் தாய்மொழியை கிழிச்சிட்டு பேசறாங்களே, அவங்களை ஏன் யாருமே எதுவுமே கேள்வி கேட்கல? தேசிய ஒருமைப்பாடு குறித்து பேசுபவர்கள் ஒருத்தர்கூட இதை கண்டிக்கலையே ஏன்? மான உணர்வு செத்து போயிடுச்சா?

 கன்னடம்

கன்னடம்

அவங்களுக்கு வர்றது என்ன, இன வெறி இல்லாம, சிரங்கு சொறியா? இனி ஒரு கன்னட எழுத்து இருக்காது இங்கே பார்த்துட்டே இருங்க.. எதிர்வினையாற்றதானே இருக்கேன்.. அதுக்குதான் பிறந்திருக்கேன்.. அன்புன்னா அன்பு, வம்புன்னா வம்பு.. என்னை வெட்ட வரும்போது விழுந்து கும்பிடற ஆள் இல்லை நான், என்னை வெட்ட வரும்போதே உன்னை வெட்டி முடிக்கும் ஆள் நான்..

 கேள்வி

கேள்வி

நாங்க பெரிய ஜனநாயகவாதிதான்.. அன்புக்காரர்கள்தான்.. ஆனால், சகிப்புத்தன்மைக்கு ஓரளவு இருக்கு.. தமிழன் ஏமாளி கிடையாது.. இந்த சேட்டையெல்லாம் அவர் அங்கே வெச்கிடணும்.. எனக்கு கட்சி, அரசியல், தேர்தல் எல்லாம் அப்பறம், இதுதான் எனக்கு முக்கியம்.. அந்த வட்டாள் நாகராஜ் எல்லாம் யாரு எனக்கு.. அவன் ஒரு ஆளா? நான் அகில உலகத்தையும் கேள்வி கேட்டுட்டு சண்டை போட்டுக்கிட்டு இருக்கேன்.. என்கிட்ட வந்து வாட்டாள் நாகராஜ்ன்னு சொல்றீங்க?

 தனித்து போட்டி

தனித்து போட்டி

நாங்க இந்த முறை தனித்துதான் தேர்தலில் போட்டி.. பன்னி, நாய் நரி, கழுதை, செந்நாய் எல்லாம் கூட்டமாதான் வேட்டைக்கு போகும்.. சிங்கம், புலி எல்லாம் தனியாதான் வேட்டைக்கு போகும்.. நான் புலி, தனியாதான் வேட்டையாடுவேன்.. அவங்க வலுவில்லாமல், தன் மக்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், ஆள் சேர்த்துக்கிடறாங்க.. நான் எவ்ளோ பெரிய சண்டைக்கும் தனியாதான் போவேன்.. வாடான்னு சொல்லிட்டு தான் போவேன்.. அது எத்தனை பேராக இருந்தாலும் சரி, நான் தனியா சண்டை போட்டுதான் பழக்கம்.. கோழை இல்லை.. சிலர் கூட்டணி சேர்த்துட்டு நிக்கிறாங்கன்னா அது அவங்களுடைய பலவீனம்.. மக்களை நம்பும் நாங்கள் தனியாவே தேர்தலை சந்திக்கிறோம்.

திமுக

திமுக

திமுகவை மட்டும் கடுமையாக எதிர்க்கிறீங்க, அதிமுகவை அவ்வளவா எதிர்க்கலையேன்னு என்னை கேட்கறாங்க.. அவர் என்னமோ எனக்கு காதலி மாதிரியும், இவர் என்னவோ எனக்கு வேண்டாதவர் மாதிரியும் நினைக்கிறாங்க.. கொள்கை அளவில் 2 திராவிட கட்சிகளுமே எனக்கு சம அளவு எதிரிதான்.. ஆனால் திராவிடம் என்பதற்கு எதிரி இன்னொரு திராவிடம் இல்லை.. ஒரு ஆணிக்கு எதிரி இன்னொரு ஆணி இல்லை.. சுத்தியல்தான்.. இப்போ சுத்தியல் யார் என்பதுதான் பிரச்சனை.

 கதர் கட்டின பாஜக

கதர் கட்டின பாஜக

பாஜக - காங்கிரஸ், இது ரெண்டும் எதிரெதிர் கட்சின்னு நினைச்சீங்கன்னா, உங்களை மாதிரி அறிவிலி யாருமே இல்லை.. ஏன்னா 2 கட்சிக்கும் ஒரே கொள்கைதான்.. இது சவுண்டு இந்துத்துவா... இது சாஃப்ட் இந்துத்துவா. அவர் கதர் கட்டின பாஜக.. இவரு காவி கட்டின காங்கிரஸ்.. அதே மாதிரிதான் இங்க இருக்கிற 2 கட்சிகளும்.. அதே கொள்கைதான்.. 2 கட்சியும் ஊழல்.. 2 கட்சியும் சாராயம்.. 2 கட்சியும் முறையற்ற ஊழல்.. 2 கட்சியும் மணல் கொள்கை.. அதனால்தான், திராவிடத்துக்கு மாற்று தமிழ் தேசியம் என்கிறோம்.

 திராவிட அரசியல்

திராவிட அரசியல்

அப்போ திராவிட கட்சியின் அதாவது திராவிட அரசியல் கட்சியின் தாய் யாரு? திமுகதானே.. அதான் உன்கிட்ட நேரடியாக மோதிடறேன்னு சொல்றேன்.. அதான் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட போறேன்னு சொல்றேன்.. இவரை எதிர்த்து எடப்பாடி போட்டியிடுவாரா? டிடிவி போட்டியிடுவாரா? கமல் போட்டியிடுவாரா? யாரும் போட்டியிட மாட்டாங்க.. அதான் நான் போட்டியிட போறேன்னு சொல்றேன். வெற்றி என்பது ஜெயிப்பது இல்லை.. ஒரு கொள்கையில் உறுதியாக இருப்பதுதான் வெற்றி. வாங்க, திராவிடமா, தமிழ் தேசியமா பார்த்துடுவோம்" என்றார்.

 
 
 
English summary
Seeman says about DMK Leader MK Stalin and Diravidans Party
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X