சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதல்ல இந்த அமைச்சர்கள் 5, 8-ம் வகுப்பு தேர்வு எழுதி பாஸ் ஆகட்டும்.. ஒன்னுமே தெரியல.. சீமான் சாடல்

5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    முதல்வரின் ஆங்கில உச்சரிப்பை கிண்டல் செய்யும் சீமான்-வீடியோ

    சென்னை: "முதல்ல இந்த அமைச்சர்கள் 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வரட்டும். இவங்க தேர்ச்சி பெற்றுவிட்டார்களானால் நம்ம பிள்ளைகளை படிக்க வைப்போம்.. இவங்களுக்கு ஏஞ்சல்ஸ்ன்னு சொல்ல தெரியல. சான்பிரான்சிஸ்கோ சொல்ல தெரியல.. என்ன கொடுமை" என்று சீமான் பள்ளிக்கல்விதுறை அறிவிப்பு பற்றி சாடியுள்ளார்.

    புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கூடாது என்று மத்திய அரசுக்கு பலர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படும் எனத் தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    மேலும், 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது மாணவர்களின் இடைநிற்றலுக்குத்தான் வழிவகுக்குமே தவிர, கல்வித்தரத்தை உயர்த்தாது என்று எச்சரித்துள்ளனர்.

    சீமான்

    சீமான்

    ஆனால், 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வால் மாணவர்களின் கல்வித்தரம் உயரும் என்று அமைச்சர் செங்கோட்டையன் உறுதி தெரிவித்து இருக்கிறார். இந்நிலையில், இந்த அறிவிப்பு பற்றி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசும்போது சொன்னதாவது:

    அதிகாரம்

    அதிகாரம்

    இதை நான் கொடுமையாதான் பார்க்கறேன். பிஞ்சுகளின் மீது சுமத்தப்படுகிற ஒரு கொடுமையான வன்முறையாக இதை பார்க்கிறேன். இது எப்படி ஆயிடும்னு பார்த்தீங்கன்னா, கல்வின்னே என்னன்னே தெரியாதவங்க கிட்ட இந்த அதிகாரம் வந்துடுச்சு. கல்வியாளர்களை கூப்பிட்டு, பேசி, அதுக்காக விவாதம் நடத்தி அப்பறம்தான் முடிவு எடுத்திருக்கணும்.

    மத்திய அரசு

    மத்திய அரசு

    மத்திய அரசு சொன்ன உடனே, பிற மாநிலங்கள் செயல்படுத்த ஆரம்பிப்பதற்கு முன்னாடியே தமிழ்நாடு இதை வேகமாக கொண்டு வரவேண்டியது ஏன்? கல்விக் கொள்கையில் பொதுத்தேர்வு வெக்கணும்னு இருக்கு.. அதை ஏற்கிறதா, எதிர்க்கிறதான்ற பிரச்சனை நடந்துட்டு இருக்கும்போதே அரசு அறிவிக்க வேண்டி என்ன இருக்கு? இவங்க செயல்படுத்தட்டும்.. ஒருகாலம் வரும்போது கிழிச்சு அப்படியே தூர போடுவோம்.

    என்ன கேவலம்?

    என்ன கேவலம்?

    முதல்ல இந்த அமைச்சர்கள் 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வரட்டும். இவங்க தேர்ச்சி பெற்றுவிட்டார்களானால் பிள்ளைகளை படிக்க வைப்போம். ஒன்னுமே தெரியல.. பார்த்து படிக்கும்போதே லாஸ் ஏஞ்சல்ஸ்ன்னு சொல்ல தெரியல. சான்பிரான்சிஸ்கோ சொல்ல தெரியல.. என்ன கேவலம்?" என்றார்.

    English summary
    Naam Tamizhar Party Seeman slams TN gov and says about opinion on Fifth and Eighth public exam
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X