சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஆக".. ஸ்டிரைட்டா ஸ்டாலினுடன் மோத தயாராகி விட்ட சீமான்.. வெடித்து கிளம்பிய விவாதங்கள்.. ரிசல்ட்?

ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியிலேயே போட்டியிடுவேன் என சீமான் கூறியுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: இன்று சீமான் ஒரு சவால் விடுத்துள்ளார்.. அந்த சவால் திமுகவுக்கு எதிரானது.. திமுகவுக்கு மாற்று நாம் தமிழர் கட்சிதான் என்று பறைசாற்றி உள்ளார்.. சீமானின் இந்த பேச்சு பல விவாதங்களை கிளப்பி விட்டு வருகிறது.

சீமான் செய்தியாளர்களிடம் பேசும்போது, "திமுகவுக்கு மாற்று அதிமுக இல்லை... திமுகவுக்கு மாற்று நாம் தமிழர் கட்சி... திமுகவா? நாம் தமிழரா? திராவிடரா? தமிழரா? இந்த சண்டையை இந்த தேர்தலில் முன்னிறுத்துவோம்... இதில் மற்றவர்கள் பயப்படலாம். நான் பிரபாகரனின் பிள்ளை... பயப்படமாட்டேன். நான் பிரபாகரனின் பிள்ளை... அவர் கருணாநிதியின் மகன்... இருவரும் ஒரே களத்தில் யுத்தம் செய்வோம்.

நான் போட்டியிடவிருக்கும் தொகுதியை மரியாதைக்குரிய ஐயா ஸ்டாலின் அவர்கள் தான் முடிவுசெய்யவேண்டும்.... அவர் எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறாரோ அந்தத் தொகுதியில் நானும் போட்டியிடவிருக்கிறேன்... திமுகவா? நாம் தமிழரா? திராவிடரா தமிழரா என்று மோதிப் பார்த்துவிடுவோம்" என்று கூறியிருக்கிறார்.

திமுக

திமுக

தேர்தல் சமயத்தில் இதுபோன்ற சவால்கள் விடுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், இந்த முறை தேர்தல் ஒரு சில புதுமைகளை கொண்டு வருகிறது.. சீமான், கமல் போன்றவர்கள் திராவிட கட்சிகளின் ஓட்டுக்களை சிதறடிக்க கூடியவர்களாக கணிக்கப்பட்டுள்ளனர்.. அதற்கேற்றவாறு வாக்கு வங்கிளையும் தங்கள் கட்சியில் ஓரளவு வலுப்படுத்தி வைத்துள்ளனர்.

 கூட்டணி

கூட்டணி

ரஜினி அரசியலுக்கு வராத சூழலில், கமல் கூட்டணி தொடர்பாக திமுகவுடன் மறைமுகமான பேச்சு நடத்துகிறார் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் சீமானின் இந்த சவால் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.. திமுகவுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி இந்த முறை திகழுமா என்ற ஆர்வமும் எழுந்துள்ளது... உண்மையை சொல்ல போனால், அப்படி எதுவுமே பெரிசா விளைவுகள் வராது என்றுதான் தோன்றுகிறது.

 அனல் பேச்சு

அனல் பேச்சு

வேண்டுமானால் சீமானின் பேச்சு, ஸ்டாலின் பேச்சைவிட அனல் தெறிக்கும்.. தமிழர், தமிழ்நாடு, தமிழ் மொழி குறித்து அவரது தட்டி எழுப்பும் பேச்சுகள் நரம்பு புடைக்கும்.. கோபம் கொப்பளிக்கும்.. கைதட்டல் விண்ணை பிளக்கும்.. இதனால் சென்ற முறை போலவே, இந்த முறையும் யூடியூப்களில் சீமானின் கொந்தளிப்பு பேச்சுக்கள் வைரலாகும்.. டிரெண்டாகும்.

வாக்குகள்

வாக்குகள்

அதேபோல, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது இல்லை என்பதை நாம் தமிழர் கட்சியினர் கொள்கையாக வைத்துள்ளனர்... அந்த நேர்மைக்கு வேலூரில் 27 ஆயிரம் வாக்குகள் கிடைத்ததே அதற்கு சாட்சியாக விளங்கி கொண்டிருக்கிறது.. இந்த முறையும் சீமான் கட்சியினர் பணம் தர மாட்டார்கள்.. மாறாக பணம் தரும் கட்சிகளை டார் டாராக கிழித்தெறிவார்கள்... இது நிச்சயம் இளம் தலைமுறையினரின் கவனத்தை தன் பக்கம் திருப்ப செய்யும்!

 வாக்கு வங்கி

வாக்கு வங்கி

இதெல்லாம் சீமானுக்கு சாதகமான விஷயங்களே.. ஆனால், திராவிடக் கட்சிகளை வீழ்த்தும் அளவிற்கு நாம் தமிழருக்கு வாக்கு வங்கி இல்லை என்பதே உண்மை.. கட்சி ஆரம்பித்து 10 வருஷம் ஆனாலும், 3.87 சதவீத வாக்கு வங்கியை ஓரளவு தக்க வைத்துள்ளது. அதற்காக, திமுகவுக்கு இணை என்று சொல்லிவிட முடியாது.. 2016லேயே திமுகதான் ஆட்சியை பிடித்திருக்க வேண்டியது.. வாக்கு வங்கியை அதிகமாக திமுக பெற்றிருந்தாலும், குறைவான தொகுதிகளை அக்கட்சி கைப்பற்ற தவறிவிட்டது.

அதிமுக

அதிமுக

இதற்கு காரணம், திமுகவின் வாக்குகளை பிரித்த பங்கு சாட்சாத் சீமானுக்குதான் போய் சேரும். இப்போதும் அதேதான் நடக்க போகிறது... 10 வருஷமாக ஆட்சியை பிடிக்க முடியாமல் போராடி கொண்டிருக்கும் திமுகவுக்கு இந்த முறையும் பெரும் பிரச்சனையாக இருக்க போவது நாம் தமிழர் கட்சிதான்.. பிரம்மாண்டமாக நிற்கும் அதிமுகவை விட, தடுக்கி விடும் மடுபோல அபாயகரமானது நாம் தமிழர் கட்சி.. காரணம், அந்த கட்சியில் வீரியமிக்கவர்கள், வீரமிக்கவர்கள் அதிகம்!

கொளத்தூர்

கொளத்தூர்

ஒருவேளை ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலேயே போட்டியிடுவதாக வைத்து கொண்டாலும், அங்கும் சீமானுக்கு சிக்கல்தான்.. காரணம் ஏராளமான நலத்திட்டங்களை அந்த தொகுதிக்கு செய்து வைத்துள்ளார் ஸ்டாலின்.. அது திமுகவின் கோட்டையும்கூட.. அதனால், திமுகவை வீழ்த்தும் அளவிற்கு நாம் தமிழர் விஸ்வரூபம் எடுத்துவிடவில்லை... அப்படியே சீமான் போட்டியிட்டாலும், கடந்த முறை பெற்ற வாக்கு சதவீதத்தைவிட இந்த முறை குறையும் என்றே அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.

 புது டிரெண்ட்

புது டிரெண்ட்

இதில் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டி உள்ளது.. தமிழகத்தில் வழக்கமாக தேர்தலில் 2 தலைவர்கள் ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிடுவதில்லை.. இந்த முறை சீமான் சொல்வது புதுசாக இருக்கிறது.. இந்த டிரெண்டை சீமான் உடைப்பாரா என்று தெரியவில்லை.. ஆனால், ஸ்டாலினை எதிர்த்து சீமான் போட்டியிட்டால், அதன்மூலம் திமுகவின் வாக்குகள் பிரிந்து, பாஜகவின் வாக்குகள் கூடும் என்பதே இதன் அடிப்படை சூட்சுமம்!

English summary
Seeman says he will compete against MK Stalin in Assembly Election 2021
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X