• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

வருவாய் இழந்த அமைப்புச் சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த சீமான் கோரிக்கை

|

சென்னை: கொரோனா நோய்த்தொற்று ஏற்படுத்தியிருக்கும் அசாதாரணச் சூழலால் வருவாயை இழந்துநிற்கும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா நோய்த் தொற்று ஏற்படுத்தியிருக்கும் பேரிடர் நாடு முழுமைக்கும் ஒரு நெருக்கடியான நிலையையும், அசாதாரணச் சூழலையும் உருவாக்கிமக்களின் இயல்பு வாழ்க்கையை மொத்தமாய் முடக்கிப் போட்டிருக்கிறது.

இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில் தமிழக அரசுமேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்புபணிகள் பாராட்டுக்குரியது, எனினும் நோயின் தீவிரத்தை தாக்கத்தையும் அதனால் ஏற்பட்டிருக்கும் பலிகளையும் மற்ற இடங்களில் பார்க்கும் பொழுது இன்னும் தீவிரமாகக் கவனத்தில் கொண்டு அரசு துரிதமாக செயல்படவேண்டும்.

கொரோனா வந்தவருக்கு திடீர் மாரடைப்பு.. கொல்கத்தாவில் ஒருவர் பலி.. இந்தியாவில் பலி எண்ணிக்கை 8 ஆனது!

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

அரசு அறிவித்துள்ள கொரோனா நோய்ப்பரவல் தடுப்பு சமூகமுடக்கத்தால் அனைத்துத்தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டாலும் அமைப்புசாராதொழிலாளர்கள் முழுமையாக வாழ்விழந்து நிர்கதியாக நிற்கின்றனர். அன்றாடம் தாங்கள்செய்யும் வேலைகள் மூலமாகவே வருவாயைப் பெற்று அதனைக் கொண்டு வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருந்த அவர்களது வாழ்வாதாரம்தான் இப்பேரிடர் காலத்தில் பெரும்கேள்விக்குறியாக மாறியுள்ளது.

உணவுக்கு வழி

உணவுக்கு வழி

சிறிய வருமானத்தைக்கொண்டு அன்றன்றைக்கு வயிற்றை நிரப்பி வந்த அவர்கள் தற்காலத்தில் உணவுக்கேவழியில்லாது பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களது பசிப்பிணியைப் போக்கவேண்டியதும், அவர்களுக்குப் போர்க்கால அடிப்படையில் உதவிகளை வழங்க வேண்டியதும் அரசின்தலையாயக் கடமையாகிறது.

முன்னெச்சரிக்கைகள்

முன்னெச்சரிக்கைகள்

அண்டை மாநிலமான கேரளாவில் அமைப்புசாரா தொழிலாளர்களைக்காக்கவும், அவர்களது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் அம்மாநில அரசு எண்ணற்றதிட்டங்களையும், ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளையும் வகுத்து அதனைச் செயலாக்கம் செய்யமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

மாநிலங்கள்

மாநிலங்கள்

மேலும் ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் அவர்களுக்கு நிவாரணத்தொகையும் அறிவித்துள்ளது. அதனைப்போலவே, தமிழக அரசும் செய்திட முன்வரவேண்டும் என்பதுதான் தற்போது அனைவரது எதிர்பார்ப்பாகவும், தன்மைக் கோரிக்கையாகவும் இருக்கிறது. ஆகவே, தமிழக அரசு சீரிய கவனமெடுத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணம்வழங்கவும், அவர்களது வாழ்வாராதரத்தை உறுதிப்படுத்தவும் உடனடியாக நடவடிக்கைகளை முடுக்கிவிடவேண்டும்.

தங்குமிடம்

தங்குமிடம்

மேலும் சாலைகளில் வாழும் ஆதரவற்றவர்கள், முதியவர்கள், பிச்சையெடுத்துவாழ்வோர், வீடற்ற திருநங்கைகள், மனநலம் குன்றியவர்கள் என யாவரையும் அரவணைத்து அவர்களுக்கான தங்குமிடத்தையும், உணவையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.மேலும் தமது இன்னுயிரையும் பொருட்படுத்தாது இந்தப் பேரிடர் காலத்தில் களத்தில் நின்று பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள்,காவல் துறையினர் உள்ளிட்ட தியாக வீரர்களுக்கும் அவர்தம் குடும்பகளுக்கும் தமிழக அரசு பாதுகாப்பான உணவு, போக்குவரத்து , பரிசோதனை உள்ளிட்ட வசதிகளையும் அவர்கள் பணியை மேலும் சிறப்பாகச் செய்திடும் வண்ணம் ஊக்கத் தொகையும் அளித்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
English summary
Naam Tamilar Movement Organiser Seeman says that Tamilnadu government has to ensure the livelihood of Non organisational workers.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more