சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோட் போட்டதில் என்ன தவறு.. அவர் என் மண்ணின் முதல்வர்.. அதெல்லாம் விட்டு கொடுக்க முடியாது.. சீமான்

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : TN CM Edapadi palanisamy wears Suit in his foreign Trip

    சென்னை : கோட் போட்டதில் என்ன தவறு? அவர் என் மண்ணின் முதல்வர். அவரை விட்டு தர முடியாது என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி லண்டன், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். அவர் லண்டனில் மருத்துவ புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்போது முதல்வர் கோட் சூட் அணிந்திருந்ததை சிலர் கேலியாக பேசி வருகின்றனர்.

    இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஆடை என்பது அவரவர்களின் தனி மனித உரிமை.

    சிதம்பரம், சிவக்குமார் அடுத்து ரேணுகா சவுத்ரி- ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்சிதம்பரம், சிவக்குமார் அடுத்து ரேணுகா சவுத்ரி- ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்

    சமூகவலைதளங்கள்

    சமூகவலைதளங்கள்

    முதல்வர் பழனிச்சாமி வெளிநாடு சென்றுள்ளார். அது ஒரு குளிர் பிரதேசம். அதற்கேற்ப உடை அணிகிறார். அதில் என்ன தவறு. வேறு வேலையில்லாதவர்கள் சமூகவலைதளங்களில் இதனை கேலி செய்கிறார்கள்.

    பெருமை

    பெருமை

    அது மனநோயாளிகளின் வேலையாகும். ஆயிரம் இருந்தாலும் அவர் தமிழகத்தின் முதல்வர். அதனை எப்படி இழிவாக பார்க்க முடியும். காமராஜர் ரஷ்யா செல்லும் போது வேட்டி சட்டையுடன் தான் சென்றார். அது இன்னும் எங்களுக்கு பெருமையாக இருந்தது.

    சினிமா

    சினிமா

    யார் யாரோ அரசியலுக்கு வருகிறார்கள். விஜய் கட்சி ஆரம்பித்தால் அதை வரவேற்பேன். ரஜினிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. ஆனால் விஜய் எனது தம்பி. சினிமாவில் ரஜினிகாந்துக்கும் விஜய்க்கும்தான் போட்டி.

    விஜய்

    விஜய்

    ரஜினியால் இன்னும் எத்தனை படங்களில் நடிக்க முடியும்? அதன் பிறகு விஜய் ஆட்டோமேட்டிக்காக சூப்பர் ஸ்டார் பதவிக்கு வந்துவிடுவார். எனவே விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சீமான் தெரிவித்தார்.

    English summary
    Naam Tamilar movement Seeman says that thre is no wrong in CM's new getup in London.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X