சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கட்டிய மனைவியை தெருவில விட்டுட்டு, பெண்களுக்கு மசோதா போடுவோம்னு சொன்ன மகாத்மா மோடி.. சீமான்

வடசென்னை பிரச்சாரத்தில் பிரதமர் மோடியை சீமான் கடுமையாக விமர்சித்தார்.

Google Oneindia Tamil News

சென்னை: "பொண்டாட்டி யசோதாவை தெருவில விட்டுட்டு, பெண்களுக்கான மசோதா போடுவோம்னு சொன்ன மகாத்மா மோடிதான்" என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக தெரிவித்துள்ளார்.

வடசென்னையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாளை ஆதரித்து அட்சியின் வேட்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

அருண்ஜெட்லி வரக்கூடாது ஒன்றரை லட்சம் வாக்குகளில் மக்கள் தோற்கடிக்கிறார்கள் மக்கள். ஆனால் அவர் எப்படி அமைச்சரானார்? அமைப்பு எவ்வளவு தவறாக இருக்கிறது பாருங்க.

Seeman slams PM Modi in North Chennai Meeting

சேலம் 8 வழிச்சாலை திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.. நிதின் கட்கரி பரபரப்பு பேச்சு! சேலம் 8 வழிச்சாலை திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.. நிதின் கட்கரி பரபரப்பு பேச்சு!

மக்களை சந்தித்து வென்றாலும் வெறும் பாராளுமன்ற அமைச்சர். மக்களை சந்திக்க வராதவர் இந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன். எந்த மாதிரியான அரசியல் இது? மக்களின் தலைவர் குடியரசு தலைவரை மக்களே தேர்வு செய்ய முடியாத நிலை. எப்படிப்பட்ட அமைப்பு இது? நாங்கள் ஆள் மாற்றத்திற்காக வந்தவர்கள் அல்ல. அமைப்பு மாற்றம், அடிப்படை மாற்றத்திற்காக வந்தவர்கள்.

எந்த திட்டத்துக்கும் 100, 500, 1000 கோடி ரூபாயை ஒதுக்குகிறார்கள். அது என்னாகிறது என்று அவர்களை கேட்டு பாருங்களேன். "தர்ரோம்னு" சொல்லலியே.. "ஒதுக்கறோம்னு"தானே சொன்னோம். அதான் "ஒதுக்கிக்கிட்டோம்" என்பார்கள்.

இந்த 5 ஆண்டுகளில் 2 மசோதாக்கள்தான் நிறைவேறியிருக்கு. ஒன்னு, முத்தலாக், 2-வது முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு.

காவிரி மேலாண்மை வைக்க வேண்டும் என்று நாம் எவ்வளவு கெஞ்சினோம்.. அதுக்கு ஒரு சட்டவரைவு இருந்ததா? கட்டிய பொண்டாட்டி யசோதாவை தெருவில விட்டுட்டு, பெண்களுக்கான மசோதா போடுவோம்னு சொன்ன மகாத்மா மோடிதான்"என்றார்.

English summary
In North Chennai Campaign, Naam Tamizhar Party Seeman has criticized PM Modi and his Economic Policies
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X