• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கருவாட்டு குழம்புன்னு சொல்லு, இல்லாட்டி சாம்பார்ன்னு சொல்லு.. அதென்ன இப்படி?.. போட்டு தாக்கிய சீமான்

|

சென்னை: "திராவிடத்தை அழிக்க ஒருத்தன்கூட இன்னும் பிறக்கவில்லைன்னு சொல்றாங்க.. சரி, பிறக்காத எதிரிக்கு ஏன் இப்படி நடுங்கிறே? பாட்டிக்கு பேத்தி பொறந்திருக்குன்னு சொல்லு.. பேத்திக்கு பாட்டி பொறந்ததா சொல்லாதே.. ஒன்னு, கருவாட்டு குழம்புன்னு சொல்லு, இல்லாட்டி சாம்பார்ன்னு சொல்லு.. கருவாட்டு சாம்பார்னு ஏன் சொல்றே? என்று தமிழ்வளம் குறித்து சீமானின் பேச்சு ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகிறது.

சென்னையில், பன்னாட்டு தமிழர் முயற்சியில் தக்கார் மசோ விக்டர் அவர்களின் 121 ஆய்வுநூல்களில் முதற்கட்டமாக 25 ஆய்வுநூல்கள் கொண்ட தொகுப்பு வெளியீட்டு விழா நடந்தது.

இதில் கலந்து கொண்டு தமிழின் பெருமைகளை நாம் தமிழர் கட்சி சீமான் பேசினார்.. அந்த பேச்சுக்கள் வழக்கம்போல், தற்போது இணையத்தில் வைரலாகியும் வருகின்றன. அவைகளின் சுருக்கம்தான் இது:

எதிரி

எதிரி

"திராவிடத்தை அழிக்க ஒருத்தன்கூட இன்னும் பிறக்கவில்லையாம்.. பிறக்காத எதிரிக்கு ஏன் இப்படி நடுங்குறே? மணியரசு ஐயாதான் இதை பத்தி நல்லா கேட்பாரு, பாட்டிக்கு பேத்தி பொறந்திருக்குன்னு சொல்லு.. பேத்திக்கு பாட்டி பொறந்ததா சொல்லாதே.. ஒன்னு, கருவாட்டு குழம்புன்னு சொல்லு, இல்லாட்டி சாம்பார்ன்னு சொல்லு.. கருவாட்டு சாம்பார்னு ஏன் சொல்றே?

தமிழர்கள்

தமிழர்கள்

"மானமுள்ள ஆயிரம் பேருடன் சண்டை போடலாம், மானங்கெட்ட ஒருத்தனுடன் சண்டை போடக்கூடாது"ன்னு பெரியாரே சொல்றாரு... சமஸ்கிருதமே தமிழில் இருந்துதான் வந்தது என்று நிரூபிக்கப்பட்ட ஒன்று.. பல சமயங்கள், நம் தமிழர் சமயத்தில் இருந்து கிளம்பி வந்ததுதான்.. தமிழ்தான் இயற்கையாகவே தோன்றிய மொழி.. மற்றவை கிளை மொழிகள்... பொற்காசுக்காக அப்போது நக்கி பிழைத்த சில கூட்டம் இருந்தது.

 புலவர்கள்

புலவர்கள்

மன்னரை புகழ்ந்து பாடினால், ஏதாவது கிடைக்கும் என்று பசியோடு புலவர்கள் அரண்மனைக்கு போவாங்க.. அங்க போயும் மன்னர்கள் முன்னாடி நின்று பாடுவாங்க.. ஆனால், அந்த பரதேசி யானையை, அவனுக்கு பரிசாக தந்துடும்.. இவனுக்கே சோறு இல்லை, இவன் எப்படி அந்த யானைக்கு சோறு போடுவான்? அந்த புலவனுக்கு சாப்பாடு தந்து, நிரந்தரமா வாழறதுக்கு நிலபுலன் தராமல், யானையை பரிசா தரலாமா? நம்ம முன்னோர்களில் இப்படிசில பைத்தியங்களும் இருந்திருக்கு.

 கடையெழு வள்ளல்கள்

கடையெழு வள்ளல்கள்

கொடையில் ஆகச்சிறந்த கொடை எது, கேட்காமலேயே தரும் கொடை என்பார்கள்.. இதைவிட பெரிய கொடை ஒன்னு இருக்கு.. "கேட்கும் திறனற்ற உயிர்களுக்கு தரும் கொடை"தான் சிறந்த கொடை.. அப்படி பார்த்தால் கடையெழு வள்ளல்களில் பாரியும், பேகனும்தான் ஆகச்சிறந்த சிறந்த புலவர்கள்.. முல்லை கொடி, மன்னர் பாரியிடம் தேர் கேட்கவில்லை. பாரி நினைத்திருந்தால், அரண்மனைக்கு வந்து ஆட்களை அனுப்பி அந்த கொடிக்கு கம்பம் நட்டு வர சொல்லி இருக்கலாம்.. ஆனால் செய்யவில்லை.. அதற்குள் அந்த கொடி விழுந்துவிடுமோ என்று பதைபதைத்து போய்விட்டான்.

மயில்

மயில்

அதனால்தான், பாரியே தேரைவிட்டு இறங்கி அந்த கொடியிடம் சென்று தேர் தந்தது, இது பைத்தியக்கார செயலாக இருந்தாலும், அது உயரிய செயல்.. மன்னன் பேகனிடம் அந்த மயில் போர்வை கேட்டுச்சா? உண்மையிலேயே போர்த்தியிருந்தால் அந்த மயில் செத்துதான் போயிருக்கும்.. ஆனால், அந்த செயலில் மேலோங்கி நிற்பது தமிழின முன்னோர்களின் "உயிர்ம நேயம்".. தமிழர்கள் மனிதநேய வாதிகள் இல்லை, "உயிர்ம நேயர்கள்" என்றார். சீமானின் இந்த பேச்சினை நாம் தமிழர் கட்சியினர் ஷேர் செய்து வருகின்றனர்.

 
 
 
English summary
Seeman speech about Value of Tamil Language
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X