சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாங்கதான் சீனியர்.. கமல்தான் எங்களை ஆதரிக்க வேண்டும்.. சீமான் நறுக்

கமல்ஹாசன் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று சீமான் கோரி உள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: "கமலைவிட நாங்கதான் அரசியலில் சீனியர்கள், அதனால் அவர்தான் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்" என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கமல் அரசியலை கூட சீமான் பல சமயங்களில் கண்டுகொள்ள மாட்டார். ஆனால் ரஜினி அரசியல் என்றால் மட்டும் கொதித்து போய் விடுவார் சீமான்.

அன்று மக்கள் நீதி மய்யம் ஆரம்பிப்பதற்கு முன்பு, குறிப்பிட்ட சில தலைவர்களை சந்தித்து பேசி வந்தார். அந்த வகையில், ஆழ்வார்பேட்டை ஆபீசில் சீமானையும் சந்தித்து பேசினார். அப்போது கமல் "சீமானுக்கு என்னைத் தெரியும், எனது சினிமாவைத் தெரியும். ஆனால், எனது கொள்கை பற்றித் தெரியாது" என்று கூறியிருந்தார்.

சீமான் அறிவிப்பு

சீமான் அறிவிப்பு

இப்போது ஒரு வருடம் முடியும் தருவாயில் அரசியலில் தனித்து போட்டி என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். இதே போலதான் வரும் தேர்தலில் தனித்து போட்டி என்று சீமானும் சொல்லி உள்ளார். இப்போது விஷயம் யார் யாரிடம் ஆதரவு கேட்பார்கள் என்பதுதான்! நேற்று கமல் பேசும்போது, 3-வது அணி அமைப்பது பற்றி கூறி, கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

கமல் அழைப்பு

இதுகுறித்து சீமான் கருத்து சொல்லி இருக்கிறார். தனது ட்விட்டர் பக்கத்தில், "கூட்டணிக்கு #கமல்ஹாசன் அழைப்பு விடுத்திருப்பது அவரது எதிர்பார்ப்பு, விருப்பம்! அரசியல் களத்தில் ஓராண்டு நிறைவு செய்துள்ள அவரை விட எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக களப்பணியாற்றிவரும் நாங்கள் தான் மூத்தவர்கள்!- சீமான்" என்று பதிவிட்டுள்ளார்.

ஆதரவு வேண்டும்

இன்னொரு ட்வீட்டில், "ஆட்சியின் செயற்பாட்டு வரைவை வெளியிட்டு 2016 சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்துள்ளோம்! நாடாளுமன்றத் தேர்தலிலும் 20 பெண்கள் 20 ஆண்கள் போட்டியிடுகிறோம்! எனவே #கமல்ஹாசன் தான் எங்களுக்கு ஆதரவளிக்கவேண்டும்.- சீமான்" என்று பதிவிட்டுள்ளார்.

ஒன்றாக சேர்ந்தால்..

ஒன்றாக சேர்ந்தால்..

சீனியர், ஜுனியர் என்று இருந்தாலும் இருவருமே அவர்களது கட்சியில் கொள்கை பிடிப்பு உள்ளவர்கள்தான்.. இருவருமே தனித்து போட்டியிடும் துணிச்சல் நிறைந்தவர்கள்தான்.. அதுவும் இல்லாமல் இது சட்டமன்ற தேர்தல் கிடையாது.. எம்பி தேர்தல்தான்.. அதனால் இரண்டு பேருமே ஒன்று சேர்ந்து போட்டியிட்டால் நல்லாதான் இருக்கும்! என்ற கருத்து பொதுவாக எழுந்துள்ளது.

English summary
Seeman said that Kamalhasan should support us in the coming elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X