சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக சட்டசபையின் நடப்பு கூட்டத்திலேயே 'மனுதர்ம' நீட் தேர்வு-க்கு முடிவு கட்ட வேண்டும்: சீமான்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபையின் நடப்பு கூட்டத் தொடரிலேயே மனுதர்மத்தின் நவீன வடிவமான நீட் தேர்வுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக சீமான் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

நாட்டின் பன்முகத்தன்மைக்கெதிராகவும், கூட்டாட்சிக்கெதிராகவும் கொண்டுவரப்பட்ட நீட் எனும் மத்தியத்தர ஒற்றைத்தகுதித்தேர்வு மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் உழைக்கும் ஆதி தமிழ்க்குடிகளின் பிள்ளைகளை மருத்துவராகவிடாது தடுக்கும்...

Seeman urges to pass resolution against NEET exam in TN Assembly

மனுதர்மத்தின் நவீன வடிவான 'நீட்' தேர்வை முற்று முழுதாகத் துடைத்தெரிய இன்றைக்குக் கூடியிருக்கிற முதல் தமிழகச் சட்டமன்றக் கூட்டத்திலேயே ஒரு முடிவு எட்டப்படவேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

கொரோனா உயிரிழப்பை குறைத்து காட்டுவதா?.. வெள்ளை அறிக்கை வெளியிடுங்க.. அரசுக்கு, சீமான் கோரிக்கை! கொரோனா உயிரிழப்பை குறைத்து காட்டுவதா?.. வெள்ளை அறிக்கை வெளியிடுங்க.. அரசுக்கு, சீமான் கோரிக்கை!

மாநிலத் தன்னாட்சியையும், மாநிலத் தன்னுரிமையையும் நிலைநாட்ட, மண்ணின் மக்களின் நலவாழ்வை உறுதிசெய்ய, மருத்துவராகும் பெருங்கனவை வர்க்கவேறுபாடின்றி யாவருக்கும் உறுதிசெய்ய 'நீட்' எனும் தடைக்கல்லை முழுதாக அகற்ற வேண்டுமென அறிவுறுத்துகிறேன்.

இவ்வாறு சீமான் வலியுறுத்தியுள்ளார்.

English summary
Naam Tamilar Chief Seeman has urged that DMK Govt should pass a resolution against NEET exam in the state Assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X