சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை- உச்சநீதிமன்ற தீர்ப்பால் பெருமகிழ்ச்சி- சீமான்

Google Oneindia Tamil News

சென்னை: சொத்துரிமையில் பெண்களுக்கும் சம உரிமை என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பு பெருமகிழ்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 1989-ல் திமுக ஆட்சியில் பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு என அப்போதைய முதல்வர் கருணாநிதி சட்டம் கொண்டுவந்தார். இதன்பின்னர் மத்தியில் 2005-ம் ஆண்டு காங்கிரஸ் அரசும் இதேபோல் ஒரு சட்டம் கொண்டு வந்தது.

Seeman welcome SC Verdict on women’s share in parental property

ஆனால் 2005-ம் ஆண்டுக்கு முன்பு பிறந்த பெண்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது என்கிற வாதம் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், பெற்றோரின் பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு அளித்தது.

நாடு முழுவதும் இந்த தீர்ப்புக்கு பெரும் வரவேற்பளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

Seeman welcome SC Verdict on women’s share in parental property

சொத்துரிமையில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் சம உரிமை வழங்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது பெருமகிழ்ச்சியையும், அளப்பெரும் நம்பிக்கையையும் அளிக்கிறது.

சின்னக்கண்ணன் அழைக்கிறான்... களைகட்டிய கிருஷ்ண ஜெயந்தி - வீட்டிற்குள் வந்த கண்ணன்கள்ve

பெண்ணுரிமையை நிலைநாட்டும் இத்தீர்ப்பின் மூலம் பாலினச் சமத்துவம் தழைக்கட்டும்! சமூக நீதி வெல்லட்டும்! இவ்வாறு சீமான் பதிவிட்டுள்ளார்.

Seeman welcome SC Verdict on women’s share in parental property
Seeman welcome SC Verdict on women’s share in parental property
English summary
Naam Tamilar Chief Seeman welcomes the Supreme Court Verdict on women’s share in parental property.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X