சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஆக ஆக".. இன்று "ஐயா ஸ்டாலின்".. சூப்பரா வாழ்த்து சொன்ன சீமான்.. கொடி கட்டி பறக்கும் நாகரீகம்

ஸ்டாலினுக்கு சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "ஐயா ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என்று மனசார சொல்லி உள்ளார் சீமான்.. முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு, சீமான் சொன்ன இந்த வாழ்த்துதான் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.

சீமான் அரசியலை பொறுத்தவரை, முதல் எதிரியே திமுகதான்.. முதல் குறியே முக ஸ்டாலின்தான்..! சீமான் கட்சி ஆரம்பித்த இந்த 10 வருஷமும், ஸ்டாலினை பற்றி பேசிய பேச்சுக்கள்தான் அதிகம்..

அதிகமாக கிண்டல் செய்ததும் ஸ்டாலினைதான்.. ஸ்டாலினைபோலவே பேசி காட்டுவார்.. பாடி காட்டுவார்.. நடித்து காட்டுவார்.. காரணம் இது ஸ்டாலின் என்ற தனிப்பட்ட நபரின் மீதான கோபம் இல்லை. திமுகவின் மீதான கோபம்..!

எல்லாத்துக்கும் எல்லாத்துக்கும் "இவர்"தான் காரணம்.. அதிமுகவுக்கு சீட் கிடைக்கவும்.. திமுக சறுக்கவும்.. ஜஸ்ட் பாஸ்!

திமுக

திமுக

இதற்கு காரணம், அரசியல்ரீதியாக பார்த்தால் வழக்கமாக திமுகவும், அதிமுகவும்தான் முட்டிக்கொள்ளும்.. ஆனால், கருத்தியல்ரீதியாக பார்த்தால் திமுகவுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும்தான் போட்டியே நடக்கும்.. இந்த முறையும் முதலிடத்தை எட்டிப்பிடித்த திமுகவை, 3-ம் இடத்துக்கு வந்த நாம் தமிழர் கட்சிதான் தாறுமாறாக விமர்சித்தது.

ஸ்டாலின்

ஸ்டாலின்

இன்னும் சொல்லப்போனால், அதிமுகவைவிட, திமுகவை அதிகம் எதிர்த்தது சீமான்தான்.. அதனால்தான் இந்த முறை அதிமுகவின் வாக்குகள் பெருமளவு சீமானுக்கு பிரிந்துள்ளன. இதற்கு மற்றொரு அடிப்படை காரணம் பாஜக.. மத்தியில் ஆளும் பாஜகவை யார் உண்மையாக எதிர்க்கிறார்களோ, அவர்களை தமிழக மக்கள் உற்று நோக்குகிறார்கள்..

கூட்டணி

கூட்டணி

திமுகவோ அரசியலுக்காக மட்டுமே எதிர்க்கிறது.. ஒருவேளை மறுபடியும் அக்கட்சியுடன் கூட்டணி வைத்தால், எதிர்க்காமலேயே போய்விடும்.. ஆனால், சீமான் அப்படி இல்லை.. பாஜகவை எதிர்த்து கொண்டே இருப்பார் என்பதையும் மக்கள் அறிந்து வைத்துள்ளனர்.

சவால்

சவால்

அதனால்தான், ஸ்டாலினுடன் நேருக்கு நேராக இந்த முறை மோதுவது என்று சீமான் சேலஞ்ச் செய்தார்.. சொந்த தொகுதியில் ஸ்டாலினை தோற்கடிக்காமல் போக மாட்டேன் என்றும் சீறினார்.. நேருக்கு நேர் கருத்தியல் ரீதியாக மோதுவாம் வா, என்று ஸ்டாலினை அழைத்தார்.. ஆனால், எதிர்பாராதவிதமாக திருவொற்றியூர் தொகுதியில் நின்றுவிட்டார்.. இப்போது திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், தோற்றே போனாலும் 3வது இடத்தை பெற்றுள்ளார் சீமான்.

 ஐயா ஸ்டாலின்

ஐயா ஸ்டாலின்

இந்நிலையில், வெற்றி பெற்ற ஸ்டாலினுக்கு பல தலைவர்கள் வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.. கமல் நேற்று நேரிலேயே போய் ஸ்டாலினை பார்த்து வாழ்த்து சொல்லிவிட்டு வந்தார்.. இந்நிலையில், சீமானும் ஒரு வாழ்த்து பதிவிட்டுள்ளார்.. அதில், "தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று நாளை ஆட்சியமைக்கவிருக்கும் திமுக-வுக்கும், அதன் சட்டமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகள்!" என்று கூறியுள்ளார்.

அண்ணா

அண்ணா

இந்த ட்வீட்டுக்கு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.. அதில், ஒருவர் "நீங்க தானே அண்ணா, ஒரு மேடை பேச்சில், விழுந்த திமுக விழுந்ததாகவே இருக்கட்டும், அதனால் இனி எப்பவும் மேல எழும்பாதுனு சொன்னிங்க.. இன்னைக்கு உங்க வாயாலே திமுக தலைவர் ஸ்டாலி்ன் முதலமைச்சரானதுக்கு வாழ்த்து சொல்ல வச்சுட்டோம் பாத்திங்களா" என்று கமெண்ட் போட்டுள்ளார்.

 கமெண்ட்கள்

கமெண்ட்கள்

அதற்கு இன்னொருவர் வந்து, "நீங்களும் தான் சொன்னீங்க, நாதக வாட்சப் கட்சின்னு ,உங்க கண்ணு முன்னாடியே இப்போது மூணாவது இடத்தில இருக்கிறோம். இப்போ என்ன பண்ண போறீங்க?" என்று கேட்டுள்ளார். இப்படி மாறி மாறி கமெண்ட்கள் குவிந்து வந்தாலும், காலம் முழுக்க ஸ்டாலினையே எதிர்த்து வந்த சீமான், இன்று வாழ்த்து போட்டு பாராட்டி உள்ளது அரசியல் நாகரீகத்தின் இன்னொரு வெளிப்பாடே ஆகும்...!

English summary
Seeman wished DMK Leader MK Stalin for his success
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X