சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏன்.. ஜெயலலிதா, கருணாநிதி சமாதி கிட்ட அணுக்கழிவை புதையுங்களேன்.. சீமான் அட்டாக்!

கூடங்குளம் அணுக்கழிவு பாதுகாப்பானதா என்று சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "கூடங்குளம் அணுக்கழிவு பாதுகாப்பான ஒன்னுதான்னு சொன்னா, அதை பந்துபோல் உருட்டி தலைவர்கள் உதைத்து விளையாடுங்களேன்... ஏன் மெரினாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி சமாதிக்கு அருகில் புதையுங்களேன்" என சீமான் பேசியது மிகபெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பேசிய சீமான், "கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்று தலைவர்கள் சொல்கிறார்கள்.

விமானம் மோதினால்கூட ஒன்றும் ஆகாதாம். எங்களால் நம்ப முடியவில்லை. எங்களுக்கு இது புரியவும் இல்லை. பள்ளிக்கூடத்தில் பாடம் புரியவில்லை என்றால், செய்முறை மூலம் பாடம் நடத்துவார்கள். அதுபோல எங்களுக்கு செய்முறை பயிற்சி தேவை.

ஏன்டா.. நாய்ங்களா.. 100 தடவை சொல்லிட்டேன்.. பத்திரிகையாளர்கள் மீது ஆவேசம் காட்டிய ராமதாஸ்ஏன்டா.. நாய்ங்களா.. 100 தடவை சொல்லிட்டேன்.. பத்திரிகையாளர்கள் மீது ஆவேசம் காட்டிய ராமதாஸ்

மோதி காட்டு

மோதி காட்டு

யாரெல்லாம் இந்த அணு உலை பாதுகாப்புன்னு சொல்லுகிறார்களோ, அவங்களை எல்லாம் ஒரு விமானத்திலோ, ஹெலிகாப்டரிலோ ஏற்றிக்கொண்டுபோய் அணு உலை மீது ஒரு தடவை மோதிக்காட்டுங்கள். அது வெடிக்கவில்லை என்றால் நாங்க ஏத்துக்கறோம். பிரச்சினை இல்லைன்னு முடிவுக்கு வருவோம். எதற்கு நாங்கள் தண்டமாக போஸ்டர் அடிச்சு, நோட்டீஸ் அடிச்சு, கூட்டம் நடத்தப்போகிறோம்.

உருட்டி விளையாடு

உருட்டி விளையாடு

நான் சிம்னி விளக்கில் படிச்சவன். என்னை போல நிறைய பேர் இருக்காங்க. கொசுக்கடியில், மின்விசிறி இல்லாமல்கூட இருந்துக்கறோம். ஆனா எங்களுக்கு இந்த அணு உலை மூலம் வரும் மின்சாரம் தேவையில்லை. இந்த அணுக்கழிவை பந்துபோல் உருட்டிக் கொண்டு போய்விடும் என்கிறார்கள். அப்படின்னா, அமித் ஷா போன்ற தலைவர்கள் ஒரு கால்பந்துபோல் உருட்டி விளையாடுங்களேன். கோலிகுண்டுபோல் சிறிதாக உருட்டி விளையாடுங்களேன். பாக்கலாம்.

அணுக்கழிவு

அணுக்கழிவு

பாதுகாப்பான ஒன்றுன்னுதானே சொல்றீங்க? ஏன் கூடங்குளத்திலும், இடிந்தகரையிலும் புதைக்கிறீர்கள். பாதுகாப்பானது அணுக்கழிவு என்றால் நாடாளுமன்றத்துக்குக் கீழ் புதையுங்கள். இன்னும் பாதுகாப்பாக இருக்குமே?

ஜெ. சமாதி

ஜெ. சமாதி

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு இருக்கும் என்கிறார்கள். 50 வருஷத்துக்கு முன்னாடி எங்க தாத்தா கட்டின ஏரியை காணோம். இங்க தமிழ்நாட்டில் அதிகபட்ச பாதுகாப்பான இடம் அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா சமாதிகள்தான். அங்க தலைவர்கள் சமாதிக்கு இடையில் இந்த அணுக்கழிவுகளைப் புதையுங்களேன். அங்க வேணும்னா பாதுகாப்பாக இருக்க வாய்ப்பு உள்ளது.

சுனாமி வந்தால்

சுனாமி வந்தால்

சரி.. பெரிய ஈயத்தால் ஆன மதில்சுவரை கட்டி, அதில் அணுக்கழிவை கொட்டி 50 ஆயிரம் ஆண்டு காலம் பாதுகாப்பதாகவே வைத்து கொள்வோம். ஒரு சுனாமி வந்தால்?? வெள்ளம், புயல் வந்தால்?? பூமியை பிளக்கும் நிலநடுக்கம் வந்தால்?? நாங்க இறந்தே போயிடறோம்.. 2 தலைமுறைக்கு அப்புறம் அங்க ஒரு ஆழ்துறை கிணறு தோண்டினால்?? வீடு கட்ட தோண்டினால்?? அப்ப கழிவு வெளியேறினால் என்ன பண்ணுவ நீ? பாதி இந்தியா காலி ஆயிடும். எவ்வளவு பாதுகாப்பான உலையா இருந்தாலும் சரி, எனக்கு வேணாம், எடுத்துட்டு போயிடுங்க" என்றார்.

English summary
Seeman slams Kudankulam Nuclear Plan Wastage and talks about Karunanidhi Jayalalalitha Samathi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X