• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

முக்கிய பொறுப்பில் "ரெட்டி".. அப்ப "கேஸ்" எல்லாம் என்னாகும்.. பலமாக சிபாரிசு செய்த "புள்ளி" யார்?

Google Oneindia Tamil News

சென்னை: சேகர் ரெட்டி மீதான வழக்குகள் என்னாகும்? ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? என்ற சந்தேகங்கள் வலுத்து வரும் நிலையில், முக்கிய பொறுப்பில் சேகர் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளது, மிகப்பெரிய திருப்பத்தை அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது.

ஜெ.சேகர் என்னும் சேகர் ரெட்டி = இவர் பெயரை சொன்னதுமே நமக்கு கண் முன் வந்து நிற்கும் உருவம் ஓபிஎஸ்தான்..!

கடந்த காலங்களில் இவர்களுக்குள் அப்படி ஒரு நெருக்கம் இணக்கம் இருந்தது.. அதிமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் மணல் அள்ளும் பணிக்கான வாகன ஒப்பந்தத்தை ஏற்று நடத்தியவர் இந்த ரெட்டிதான்..!

 அமைச்சர் சேகர் பாபு கொடுத்த சர்ப்ரைஸ்.. கொஞ்சமும் எதிர்பார்க்காத கோவில் அமைச்சர் சேகர் பாபு கொடுத்த சர்ப்ரைஸ்.. கொஞ்சமும் எதிர்பார்க்காத கோவில்

வாகன ஒப்பந்தம்

வாகன ஒப்பந்தம்

தமிழகம் முழுவதும் மணல் அள்ளும் பணிக்கான வாகன ஒப்பந்தத்தை ஏற்று நடத்தினார்.. ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தபோது, சேகர் ரெட்டியின் ஆதிக்கம் வெளிப்படையாக தெரிய வந்தது.. அதற்கேற்றார்போல, திருப்பதி வெங்கடாச்சலபதி கோவில் அறங்காவலராக தமிழக பிரதிநிதியாக சேகர் ரெட்டியும் அமர்த்தப்பட்டிருந்தார்..

போட்டோ

போட்டோ

ஒருமுறை ஓபிஎஸ் தலையில் மொட்டை அடித்து கொண்டு, ரெட்டியுடன் திருப்பதி கோவிலில் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோ இணையத்தில் வைரலானது.. இவர்களின் நட்புக்கும் சாட்சியாக விளங்கியது. இதற்கு பிறகுதான், சேகர் ரெட்டியின் வீடுகளில் ரெயிட் நடந்து, பணம் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த வழக்கில் ரெட்டி கைதாகி, அப்போது சோதனையில் அவரது டைரி ஒன்று சிக்கி, அந்த டைரியில் ஓபிஎஸ் பெயர் அடிபட்டு.. இப்படி ஒரே களேபரமாக அரசியல் களம் பரபரத்தது.

ஊழல்

ஊழல்

இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தது.. யாரெல்லாம் ஊழல் செய்தார்களோ, அவர்ளின் வழக்குகள் தூசி தட்டி எடுக்கப்பட்டு, சட்ட ரீதியான தண்டனை தரப்படும் என்று ஸ்டாலின் பிரச்சாரங்களில் சொல்லி கொண்டே வந்தார்.. அப்போதே சேகர் ரெட்டியின் பெயரும் பலருக்கு நினைவுக்கு வந்தது.. ஏனென்றால், சேகர் ரெட்டி மீதான வழக்கு என்னாச்சு என்று கேள்வி எழுப்பி கொண்டிருந்ததே ஸ்டாலின்தான்..!

ஸ்டாலின்

ஸ்டாலின்

ஆனால், ஸ்டாலின் முதல்வரானதுமே, சேகர் ரெட்டி நேரில் வந்து சந்தித்து பேசினார்.. கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் தொழிலதிபர்கள், விஐபிக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், சேகர் ரெட்டியும் ஸ்டாலினை நேரில் சந்தித்து நிதி உதவி வழங்கினார். ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினார்.. யார் வேண்டுமானாலும் நிதி தரலாம், நிவாரணம் தரலாம் என்றாலும், சேகர் ரெட்டி ஏன் தந்தார்? என்ற சந்தேகம் வலுத்தது.

சேப்பாக்கம்

சேப்பாக்கம்

அதுமட்டுமல்ல, நன்கொடை தரும்போது வெளியான போட்டோவில் உதயநிதியும் உடன் இருந்தார்.. சேப்பாக்கம் எம்எல்ஏ, இங்கே வந்து போட்டோவில் நிற்கிறார் என்ற குழப்பமும் எழுந்தது.. அப்போதுதான் இதை பற்றி நாம் விசாரித்தோம்.. கடந்த 5 மாசத்துக்கு முன்பிருந்தே அதாவது பிரச்சார சமயத்தில் இருந்தே திமுக தலைமைக்கு நெருக்கமானவர்களுடன் சேகர் ரெட்டி கைகோர்த்துவிட்டாராம்... அதனால், மறுபடியும் மணல் ஒப்பந்தம் இவருக்கே தரப்படலாம் என்ற பேச்சு கசிந்தது.

ஆந்திர விஐபி

ஆந்திர விஐபி

இதற்கெல்லாம் காரணம், ஆந்திரத்தின் விஐபி ஒருவர்தாம் என்றும், திமுக மேலிடத்துக்கு நெருக்கமானவர்களிடம் பேசியதே இதற்கு காரணம் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான் இன்னொரு தகவல் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. தி.நகர் தேவஸ்தான நிர்வாக கமிட்டி தலைவர் பதவியில் நீடித்தார் சேகர் ரெட்டி. இது பெருமாள் பக்தர்களை அதிருப்தி அடைய வைத்தது...

நியமனம்

நியமனம்

இந்நிலையில், தேவஸ்தான நிர்வாக கமிட்டியின் தலைவராக சேகர் ரெட்டியே நியமிக்கப்பட்டுள்ளாராம்.. இந்த தலைவர் பதவியின் காலம் கடந்த மாதம் முடிவடைந்துவிட்டது.. அதனால், இனி சேகர் ரெட்டியின் ஆதிக்கம் இருக்காது என்றும் கருதியது கோவில் நிர்வாகம்.

அதிருப்தி

அதிருப்தி

ஆனால், தலைவர் பதவியில் மீண்டும் சேகர் ரெட்டி சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். ஓபிஎஸ்சுக்கும் சேகர் ரெட்டிக்கும் நெருங்கிய நட்பு மற்றும் அதிமுக ஆட்சியும் இருந்ததால், தி.நகர் திருப்பதி தேவஸ்தான நிர்வாக கமிட்டியின் தலைவர் பதவியை தக்கவைத்துக்கொண்டாராம் சேகர்ரெட்டி. தற்போது திமுக ஆட்சி வந்திருப்பதாலும், இவரது பதவியின் ஆயுள் காலம் முடிந்தாலும், மறுபடியும் பதவியை தக்க வைக்க முடியாது என்றே கோவில் நிர்வாகம் நினைத்ததாம்.

சிபாரிசு?

சிபாரிசு?

ஆனால், மீண்டும் அவரே வந்து அமர்ந்து விட்டார்... இதன் பின்னணியில் திமுகவின் சிபாரிசு சேகர் ரெட்டிக்காக ஆந்திரா வரைக்கும் சென்றிருக்கலாம் என்று நிர்வாக தரப்பில் எதிரொலிக்கிறது... அப்படியானால் மணல் ஒப்பந்தம் மீண்டும் ரெட்டிக்கே தரப்படுமா? ஆந்திராவில் இருந்து பேசிய அந்த புள்ளி யார்? ரெட்டி மீது இருக்கும் வழக்குகள் அனைத்தும் அவ்வளவுதானா? என்ற சந்தேகங்களும் நம்மிடையே தொத்தி நிற்கின்றன

English summary
Sekhar Reddy appointed Chairman of the Board of Trustees
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X