சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுய தனிமைப்படுத்தல் சிறை வாசம் அல்ல.. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி கடிதம்

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: சுய தனிமைப்படுத்தல் சிறை வாசம் அல்ல; கொரோனாவில் இருந்து விடுதலை பெறுவதற்கான நடவடிக்கை என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி தெரிவித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி எழுதியுள்ள கடிதத்தில், "அமைதியான ஆரோக்கியமான வாழ்க்கையை போராடி மீட்க வேண்டும் என்கிற நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கூறியதையும், நாடு உனக்கு என்ன செய்தது என கேட்காமல், நாட்டுக்காக நீ என்ன செய்தாய் என கேட்க வேண்டும் என்கிற அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் கென்னடி கூறியதையும் மேற்கொள் காட்டிய தலைமை நீதிபதி, கொரோனா அச்சுறத்தலில் இருந்து மீண்டு வருவதற்கு உறுதியேற்போம் " என்று தெரிவித்துள்ளார்.

self quarantine not jail : chennai high court chief justice ap sahi written letter

கனவில் கூட காண முடியாத சவாலான நிலையை எதிர்கொண்டு இருக்கிறோம் என்றும் இதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், இன்று போல நாளையும் அச்சுமூட்டும் வகையில் சூழல் மாற வாய்ப்புள்ளதால், சுற்றுசூழலை சுத்தமாக வைத்துகொள்ளும் பணியில் இறங்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டுள்ளார்.

சமூக இடைவெளியை போதிப்பதோடு நிறுத்தாமல், அனைவரும் உண்மையாக கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சமூக இடைவெளி கையாள்வது விகாரமாக இருந்தாலும், மற்றவர்களின் நலனுக்காக அதை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய அரசின் சுய தனிமைப்படுத்தல் உத்தரவு, சிறை வாசம் என்றோ கூண்டில் அடைக்கப்படுவதாகவோ கருதாமல், கொரோனாவில் இருந்து விடுதலை பெறுவதற்கான நடவடிக்கை என எண்ண வேண்டும் என்றும், விடியும் பொழுது நமக்கு வெற்றி தருவதாக அமையட்டும் என்றும் தலைமை நீதிபதி தன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

English summary
coronavirus outbreak: madras high court chief justice ap sahi written letter that 'self quarantine not jail' :
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X