Just In
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைய கமல்ஹாசனுடன் செல்வப்பெருந்தகை பேச்சு நடத்தவில்லை!
சென்னை: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செல்வர்பெருந்தகை இணைவதாக வந்த செய்தி தவறு என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செல்வப் பெருந்தகை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுடன் பேச்சு நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. அதன் அடிப்படையில் நாமும் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம்.

ஆனால், அப்படி எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று செல்வப்பெருந்தகை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் குறித்து தவறான செய்தி வெளியிட்டதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.