சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாதுகாப்பாக இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரி.. பொதுமக்கள் அஞ்ச வேண்டாம்- பொதுப் பணித் துறை

Google Oneindia Tamil News

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக இருப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்று பொதுப்பணித் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Recommended Video

    சென்னை: பலத்த காற்று.. கொட்டித் தீர்த்த கனமழை: விடிய, விடிய மழையில் நனைந்த சென்னை!

    2015ம் ஆண்டு கனமழை கொட்டியதால், சென்னையில் பெரிய வெள்ளம் ஏற்பட்டது. ராணுவம் வந்து உணவு பொட்டலம் வழங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.

    அப்போது செம்பரம்பாக்கம் ஏரியை தாமதமாகத் திறந்துவிட்டதால் சென்னையின் ஏரிகளில் கடுமையான நீர்ப் பெருக்கு ஏற்பட்டு, ஊருக்குள் தண்ணீர் வந்ததாகவும், எனவேதான் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு உண்டு.

    செம்பரம்பாக்கம் ஏரி நீரை அளவுடன் திறந்துவிடுங்கள்.. முதல்வருக்கு கடிதம் எழுதிய பிரபல நடிகர் செம்பரம்பாக்கம் ஏரி நீரை அளவுடன் திறந்துவிடுங்கள்.. முதல்வருக்கு கடிதம் எழுதிய பிரபல நடிகர்

    மக்கள் பயம்

    மக்கள் பயம்

    அரசு தரப்பு இதை மருத்துவந்த போதிலும், பெரிய மழை வந்து விட்டாலே சென்னை மக்களுக்கு செம்பரம்பாக்கம் பற்றிய அச்சம் தொற்றிக்கொள்கிறது. இந்த நிலையில்தான், தற்போது, நிவர் புயல் தாக்கத்தின் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    நீர் மட்டம் 22 அடி (ஒரே நாளில் 10 மில்லியன்- old slide name to be changed as new)

    இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஒரு வாரத்திற்கு பிறகு, ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணை நீர் மட்டம் 22 அடியை எட்டிய பிறகு தண்ணீர் திறக்கப்படும்.

    நீர் மட்டம் 22 அடி

    நீர் மட்டம் 22 அடி

    இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஒரு வாரத்திற்கு பிறகு, ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணை நீர் மட்டம் 22 அடியை எட்டிய பிறகு தண்ணீர் திறக்கப்படும்.

    செம்பரம்பாக்கம் ஏரி

    செம்பரம்பாக்கம் ஏரி

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். ஆனால் அடிக் கணக்கில் பார்த்தால் 22 அடிக்கு மேல் தண்ணீரை தேக்குவது கிடையாது. இது திறந்துவிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    பயப்பட வேண்டாம்

    பயப்பட வேண்டாம்

    இந்த நிலையில்தான், தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக இருக்கிறது. பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவை கிடையாது. ஏரியின் நீர் மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    English summary
    Cyclone Nivar: The Public Works Department has asked the public not to panic as Sembarambakkam Lake is safe.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X