சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னைக்கு பாய்ந்து வரும் நீர்.. 6 மாதத்தில் தலைகீழாக மாறிய செம்பரம்பாக்கம்.. அசர வைக்கும் பின்கதை!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையின் குடிநீர் தேவையில் 35 சதவிகிதத்தை பூர்த்தி செய்யும் செம்பரம்பாக்கம் ஏரி தற்போது திறக்கப்பட்டுள்ளது. 6 மாதங்களுக்கு பின் இங்கு நிலைமையே தலைகீழாக மாறியுள்ளது.

Recommended Video

    சென்னை: திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி: கரையோர மக்களே கவனம்… கவனம்!

    சென்னைக்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஏரிதான் செம்பரம்பாக்கம் ஏரி. சென்னையில் ஓடும் அடையாறு ஆறு பிறக்கும் தாய்மடி இந்த செம்பரம்பாக்கம்தான். செம்பரம்பாக்கத்தில் திறக்கப்படும் தண்ணீர்தான் அடையாறு வழியாக வந்து சென்னையின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது.

    சென்னையின் நீர் தேவையை பூர்த்தி செய்ய சோழவரம், புழல், பூண்டி போன்ற ஏரிகள் உள்ளது. இந்த ஏரிகள் தவறினாலும் கூட செம்பரம்பாக்கம் எப்போதும் சென்னையின் நீர் தேவையை பூர்த்தி செய்ய தவறுவதே இல்லை.

    இன்னும் 30 வருடம்தான்.. இந்தியாவின் 30 நகரங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு வரும்.. வெளியான லிஸ்ட் இன்னும் 30 வருடம்தான்.. இந்தியாவின் 30 நகரங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு வரும்.. வெளியான லிஸ்ட்

    15 வருடம்

    15 வருடம்

    கடந்த 15 வருடமாக சென்னையில் பெரிய அளவில் வறட்சி ஏற்படாமல் இருக்கும் ஒரே ஏரி செம்பரம்பாக்கம் மட்டும்தான். சென்னையில் மிக மோசமான வறட்சி காலம் நிலவிய போது கூட, பெரிய அளவில் செம்பரம்பாக்கம் வறண்டு போனது இல்லை. 2005க்கு பின் எல்லா வருடமும் இங்கிருந்து குறிப்பிட்ட அளவு தண்ணீர் குடிநீருக்காக எடுக்கப்படுகிறது.

    எத்தனை

    எத்தனை

    இந்த ஏரியானது 500 ஆண்டுகள் பழமையானது ஆகும். இடையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இது புதுப்பிக்கப்பட்டது. 17 அடியாக இருந்து பின் 20 அடியாக உயர்த்தப்பட்டு தற்போது இந்த ஏரி 24 அடியாக உள்ளது. இந்த ஏரியின் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும். இதன் மூலம்தான் தண்ணீர் தற்போது சென்னைக்கு கிடைத்து வருகிறது.

    மதகுகள்

    மதகுகள்

    பொதுவாக 22 அடியை இந்த ஏரி எட்டும் போது திறந்து விடப்படும். ஏரியின் கொள்ளளவை பொறுத்து இடையில் சில வருடங்கள் 17 அடி இருக்கும் போது கூட திறந்து விடப்பட்டுள்ளது. கொஞ்சம் 2005க்கு பின் ஒவ்வொரு வருடமும் 13 கன அடி வீதம் குடிநீருக்காக ஏரியில் இருந்து எடுக்கப்படுகிறது. இதனால் இந்த ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் கூட பெரிய அளவில் அடையாற்றில் வெள்ளம் ஏற்படாது.

    ஆனால் ஏன்

    ஆனால் ஏன்

    எல்லா வருடமும் 17-22 அடி இருக்கும் போதே இந்த ஏரியில் இருந்து தண்ணீர் குடிநீருக்காக எடுக்கப்பட்டு விடுகிறது. இதனால் 2015 தவிர மற்ற வருடங்களில் அடையாற்றில் இந்த ஏரியால் வெள்ளம் ஏற்பட்டது கிடையாது. 2015ல் வெள்ளம் ஏற்பட காரணம் நிறைய விஷயம் உள்ளது. 2015ல் தண்ணீர் திறக்கப்பட்ட போது மழை காரணமாக அடையாற்றில் ஏற்கனவே தண்ணீர் இருந்தது.

    வேறு

    வேறு

    அதேபோல் அடையாற்றுடன் இணையும் மற்ற ஏரிகளிலும் தண்ணீர் முழுமையாக இருந்தது. இந்த சிறிய ஏரிகளின் தண்ணீர், செம்பரம்பாக்கம் நீர், மழை நீர் எல்லாம் சேர்ந்து மொத்தமாக வந்த காரணத்தால் 2015ல் அடையாற்றில் வெள்ளம் ஏற்பட்டு, சென்னை மூழ்கியது.கொஞ்சம் வேகமாக ஏரியை திறந்து இருந்தால் ஒருவேளை வெள்ளத்தை தவிர்த்து இருக்கலாம்.

    இந்த முறை

    இந்த முறை

    மற்ற வருடங்களில் இந்த நிலை ஏற்பட்டது கிடையாது. செம்பரம்பாக்கம் 22 அடியை எட்டினாலும் கூட அடையாற்றில் தண்ணீர் இருக்காது. இதனால் ஏரியை திறக்கும் போது வெள்ளம் வந்தது இல்லை. 2015 மட்டும் கொஞ்சம் விதி விலக்கு. இந்த நிலையில்தான் தற்போது செம்பரம்பாக்கம் 22 அடியை எட்டி திறக்கப்பட்டுள்ளது. அடையாற்றில் மழை காரணமாக ஏற்கனவே தண்ணீர் உள்ளது.

    தண்ணீர் உள்ளது

    தண்ணீர் உள்ளது

    ஆனால் செம்பரம்பாக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டாலும் பெரிய அளவில் வெள்ளம் ஏற்படாது. ஏனென்றால் மற்ற ஏரிகளில் இருந்து அடையாறுக்கு 2015 போல பெரிய அளவில் நீர் வரவில்லை. இதனால் இந்த முறை பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. ஆனாலும் கொஞ்சம் தண்ணீர் கரை புரண்டு வெளியே வர வாய்ப்புள்ளது.

    சின்ன வெள்ளம்

    சின்ன வெள்ளம்

    இந்த ஏரியை திறப்பதால் அடையாறு ஆற்றின் கரையோரம் இருக்கும் பகுதிகளில் சின்ன வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. காவலூர், குன்றத்தூர், திருநீர்மலை, திருமுடிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அடையாறு ஆற்றில் ஏற்கனவே மழை காரணமாக தண்ணீர் உள்ள நிலையில் தற்போது செம்பரம்பாக்கம் நீரும் வருவதால் சிறிய அளவில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    எப்படி

    எப்படி

    8 மாதங்களுக்கு முன்புதான் செம்பரம்பாக்கம் ஏரி 15 கன அடிக்கும் கீழே போய் குட்டை போல காட்சி அளித்தது. சுத்தமாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. 15-16 வருடத்திற்கு பின் முதல் முறை செம்பரம்பாக்கம் வறண்டு போகிறது என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது இங்கு வெள்ளம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.. 8 மாதத்தில் இந்த ஏரியை மொத்தமாக இயற்கை புரட்டி போட்டுள்ளது.

    English summary
    Sembarambakkam opened to Adyar due to Nivar Storm: The back story of the river that gives water to Chennai .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X