சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராஜீவ் வழக்கு: 7 தமிழரை விடுதலை செய்ய ஆளுநருக்கு மூத்த வழக்கறிஞர் துரைசாமி வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மூத்த வழக்கறிஞரும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவருமான எஸ். துரைசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்யலாம் என்பது தமிழக அமைச்சரவை தீர்மானம். இதற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் 2 ஆண்டுகளாக ஒப்புதல் தராமல் உள்ளார்.

Senior Adv. Doraisamy urges to relase Seven Tamils in Rajiv Case

உச்சநீதிமன்றமும் அண்மையில் இது தொடர்பாக ஆளுநர் மீது அதிருப்தியை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோருக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் துரைசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு 12 பக்க கடிதம் அனுப்பி இருக்கிறார்.

பாஜக சிரமப்பட்டு வேல் பேரணி நடத்தி நாம் தமிழர் கட்சியைத்தான் வளர்க்கிறது... சீமான் பொளேர்பாஜக சிரமப்பட்டு வேல் பேரணி நடத்தி நாம் தமிழர் கட்சியைத்தான் வளர்க்கிறது... சீமான் பொளேர்

இந்த கடிதத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடக்கம் முதல் சிபிஐ எப்படி தவறான முறையில் அணுகியது என்பதை ஆதாரங்களுடன் விவரித்திருக்கிறார் துரைசாமி. மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிபிஐ இன்னமும் பல முக்கியமான மர்ம முடிச்சுகளை அவிழ்க்காமல் இருக்கிறது என்பதையும் துரைசாமி பட்டியலிட்டிருக்கிறார்.

அத்துடன ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவருமே ஆயுள் காலம் முழுவதுமே தண்டனை அனுபவிக்க வேண்டியதில்லை என்பதை மகாத்மா காந்தி படுகொலை வழக்கு குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதன் மூலம் சுட்டிக்காட்டியிருக்கிறார் துரைசாமி.

English summary
Senior Adv. Doraisamy has urged to relase the Seven Tamils in Rajiv Case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X