சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மூவரின் தூக்குக் கயிறை அறுத்த வீரவாள்.. ராம் ஜெத்மலானிக்காக உருகிய வைகோ.. கண்ணீர் இரங்கல்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மூவரின் தூக்குக் கயிறை அறுத்த வீரவாள் ராம் ஜெத்மலானியின் வாதம் தான் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Ram Jethmalani மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடல்நலக்குறைவால் காலமானார்

    சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மூவரின் தூக்குக் கயிறை அறுத்த வீரவாள் ராம் ஜெத்மலானியின் வாதம் தான் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

    மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் காலமானார். ராம் ஜெத்மலானிக்கு வயது 95. அவரின் மரணம் அரசியல் தலைவர்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழர்களின் விடுதலைக்காக கடுமையான சட்ட போராட்டம் நடத்தியவர் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி என்பது குறிப்பிடத்தக்கது.

    அழைத்து வந்த வைகோ.. நீதிமன்றத்தை அசர வைத்த வாதம்.. 7 தமிழர்களின் உயிரை காத்த ராம் ஜெத்மலானி!அழைத்து வந்த வைகோ.. நீதிமன்றத்தை அசர வைத்த வாதம்.. 7 தமிழர்களின் உயிரை காத்த ராம் ஜெத்மலானி!

    அழைத்து வந்தார்

    அழைத்து வந்தார்

    இந்த வழக்கில் இவர் செய்த வாதங்கள் மிக முக்கியமானது ஆகும். 7 பேரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு ராம் ஜெத்மலானி வைத்த வாதங்கள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மூலம் இந்த வழக்கிற்காக அழைத்து வரப்பட்டவர்தான் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி.

    இவர்தான் நண்பர்

    இவர்தான் நண்பர்

    நான் வைகோவின் நீண்ட கால நண்பன். ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேருக்காக தொடர்ந்து போராடுவேன். 7 பேரும் விடுதலை அடைய வேண்டும் என்பதுதான் வைகோவின் ஆசை. அவரின் ஆசையை கண்டிப்பாக நான் சட்ட போராட்டம் மூலம் நிறைவேற்றுவேன், என்று குறிப்பிட்டவர்தான் ராம் ஜெத்மலானி.

    இரங்கல்

    இரங்கல்

    இந்த நிலையில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மறைவுக்கு வைகோ ஆழ்ந்த இரங்கல் தெரித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மூவரின் தூக்குக் கயிறை அறுத்த வீரவாள் ராம் ஜெத்மலானியின் வாதம் தான். ராம் ஜெத்மலானியின் என்ற மாமனிதரின் நினைவுகள் என் இதயத்தில் என்றும் சுழன்றுகொண்டே இருக்கும்.

    நேரில் கண்ணீர்

    நேரில் கண்ணீர்

    அவர் நீதிக்காகக் கடைசிவரை போராடினார். அவரின் மறைவு நீதித்துறை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று வைகோ குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இன்று ராம் ஜெத்மலானி உடலுக்கு வைகோ நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார். இதற்காக வைகோ இன்று டெல்லி செல்ல இருக்கிறார்.

    English summary
    Senior Advocate Ram Jethmalani is a sword of justice says Vaiko in his condolences.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X