• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அதை விடுங்க.. மொத்தம் 4 பேர்.. வன்னியர், கவுண்டர், பட்டியலினம், சிறுபான்மையினம்.. எதுக்கு தெரியுமா?

|

சென்னை: ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்களே.. அதுபோல திமுக இருக்கிறது.. எரிகிற கொள்ளியில் பிடுங்கிறது லாபம் என்று திமுக உள்ளது.. இவ்வளவிற்கும் காரணம், முதல்வருக்கும் - துணை முதல்வருக்கும் இடையே உள்ள "கோல்ட் வார்"தான்!

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் ஓபிஎஸ்-க்கும், எடப்பாடியாருக்கும் 3 வருடமாகவே உள்ளுக்குள் பூசல் இருந்து வந்தாலும், தற்போது வெளிப்படையாகவே கொந்தளித்து காணப்படுகிறது.

இதில் எப்படியும் 2 பேரில் ஒருத்தர்தான் முதல்வர் ஆவது உறுதி என்ற கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்ட அதிமுக மூத்த தலைகள், துணை முதல்வர் பதவிக்கும் அடி போட்டு வருகிறார்கள். இதில், என்ன ஒரு ஹைலைட் என்றால், இந்த துணை முதல்வர் வேட்பாளர் பதவிக்கும் இரு தரப்புமே காய் நகர்த்த துவங்கி உள்ளதுதான்!

"கிரிட்டிக்கல் ஆக உள்ளார்.. நலமாக உள்ளார் என சொல்ல முடியாது" எஸ்பிபி உடல்நலம் குறித்து கமல் பேட்டி

 ஆதரவாளர்கள்

ஆதரவாளர்கள்

தன் மகனைதான் மத்திய அமைச்சராக்க முடியவில்லை.. இந்த முறையாவது தான் முதல்வராக வர வேண்டும் என்று ஓபிஎஸ் நினைக்கிறார்.. அவரது ஆதரவாளர்களும் அவ்வாறே கருதுகிறார்கள்.. அதனால்தான் தேனியில் போஸ்டரை ஒட்டி வெளிப்படையாகவே தங்கள் ஆதரவை காட்டினர்.

 எடப்பாடியார்

எடப்பாடியார்

ஆனால், இந்த முறையும் தன்னையே முதல்வர் ஆக்க வேண்டும் என்று எடப்பாடியார் தரப்பு கருதுகிறது.. இதற்கு ஒரு முடிவு கட்டதான், 28ம் தேதி, செயற்குழுவை கூட்டி விவாதிக்கலாம் என்று சொல்லி உள்ளனர். பிறகு ஒருகட்டத்தில் முதல்வர் வேட்பாளர் பதவியை விட்டுத்தர ஓபிஎஸ் முன்வந்ததாகவும், அதற்கு பதிலாக பொதுச்செயலாளர் பதவிக்கு குறி வைப்பதாகவும் ஒரு தகவல் கசிந்தது. அதற்கு காரணம், ஆட்சி என்பது 5 வருஷம்தான், ஆனால் கட்சி என்பது எப்போதுமே தன் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதுதான் அதன் கணக்கு!

 கட்சி வேட்பாளர்கள்

கட்சி வேட்பாளர்கள்

இதனிடையே மற்றொரு தகவலும் கசிந்து வருகிறது.. அதாவது கட்சி தலைமைக்கு, ஓபிஎஸ் என்றும், ஆட்சிக்கு எடப்பாடியார் என்றும் சில அமைச்சர்கள் ஐடியா தந்துள்ளனர்.. அது தொடர்பாகவும் பேசினார்களாம்.. ஆனால், கட்சி வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் அங்கீகார படிவத்தில், கையெழுத்திடும் அதிகாரத்தை விட்டுத்தர எடப்பாடியார் மறுத்துவிட்டாராம்.

 அதிருப்தி

அதிருப்தி

அதுமட்டுமல்ல, கட்சியில் வழிகாட்டி குழு அமைக்க, முதலமைச்சர் மறுத்தது, மற்ற சமுதாய அமைச்சர்களிடம் ஒருவித அதிருப்தியையும் உண்டுபண்ணிவிட்டதாம்.. அதனால், எடப்பாடியார் பக்கம் இருந்த சில சீனியர் அமைச்சர்கள், ஓபிஎஸ் தரப்பை ரகசியமாக சந்தித்து பேசியதாகவும்,, அப்போது, முதல்வர் வேட்பாளராக, ஓபிஎஸ்சை முன்னிறுத்த சம்மதம் என்றும் சொல்லி உள்ளனர்.. ஆனால் ஒரு கண்டிஷனையும் சேர்த்து போட்டார்களாம்.

 பச்சைக்கொடி

பச்சைக்கொடி

அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்றால், வன்னியர், கவுண்டர், பட்டியலினத்தவர், சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு, தலா ஒரு துணை முதல்வர் பதவி என்று 4 பேரை நியமிக்க வேண்டும் என்று சொன்னார்களாம்.. இதற்கு ஓபிஎஸ்சும் பச்சைக்கொடி காட்டியதாக தெரிகிறது. இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. எப்படியும் நடக்க போகிற செயற்குழு கூட்டத்தில் இதற்கெல்லாம் ஒரு முடிவு கிடைக்கும் என்றே நம்பப்படுகிறது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
English summary
Senior AIADMK leaders suggest for 4 Deputy CM posts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X