சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வடபோச்சே... பாஜக தலைவர் பதவி அம்போ- எச்.ராஜா, பொன்னார், வானதி, சிபிஆர் செம ஷாக்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பாஜக தலைவர் பதவிக்காக அடித்துக் கொண்டிருந்த அக்கட்சியின் மூத்த தலைவர்கள் எச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Recommended Video

    தமிழக பாஜகவின் புதிய தலைவர் எல்.முருகன் நியமனம்

    தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நீண்டகாலம் பதவி வகித்தார். அவரை அப்பதவியில் இருந்து அகற்றுவதற்கு எதிர்கோஷ்டிகள் பலமுறை தீவிரம் காட்டின.

    ஒவ்வொரு தேர்தலிலும் தமிழிசையை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே உள்ளடி வேலைகளை ஜரூராக நடத்தினர். ஆனால் அத்தனையையும் தமிழிசை சவுந்தரராஜன் தவிடு பொடியாக்கி தற்போது தெலுங்கானா ஆளுநராகிவிட்டார்.

    நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழக பாஜக தலைவராக எல் முருகன் நியமனம்நீண்ட இழுபறிக்கு பிறகு தமிழக பாஜக தலைவராக எல் முருகன் நியமனம்

    தலைவர் பதவிக்கு போட்டி

    தலைவர் பதவிக்கு போட்டி

    அவருக்குப் பின் தமிழக பாஜக தலைவர் யார் என்கிற கேள்வி எழுந்தது. எப்படியாவது தமிழக பாஜக தலைவர் பதவியை பிடித்துவிட வேண்டும் என்பதற்காக கட்சியில் இருக்கக் கூடிய அத்தனை தலைவர்கள், டிவி விவாதங்களில் பங்கேற்பவர்கள் என பலரும் முட்டி மோதினர். குறிப்பாக எச்.ராஜா, வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன், சி.பி. ராதாகிருஷ்ணன், கருப்பு முருகானந்தம் என பலரது பெயர்களும் அடிபட்டது.

    எல். முருகன் நியமனம்

    எல். முருகன் நியமனம்

    ஆனால் பல்வேறு மாநிலங்களின் தலைவர்கள் நியமிக்கப்பட்ட போதும் தமிழகத்துக்கு மட்டும் தலைவரை நியமிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது பாஜக மேலிடம். இந்நிலையில் தற்போது நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த எல். முருகன் என்பவரை தமிழக பாஜக தலைவராக நியமித்திருக்கிறது அக்கட்சி மேலிடம்.

    கிருபாநிதிக்கு குடைச்சல்

    கிருபாநிதிக்கு குடைச்சல்

    ஏற்கனவே டாக்டர் கிருபாநிதி என்கிற தலித்தை மாநில தலைவராக்கியது பாஜக. ஆனால் அவருக்கு உடன் இருந்த இப்போதைய தலைவர்கள் கொடுத்த நெருக்கடி கொஞ்சம் நஞ்சமல்ல. அதனால் அவர் இருந்த இடமே தெரியாமல் போனது. இப்போதும் பெரிதும் எதிர்பார்த்த தங்களுக்கு தலைவர் பதவி கிடைக்காதது எச்.ராஜா உள்ளிட்டோரை கடுமையாக அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    சீனியர்கள் குமுறல்

    சீனியர்கள் குமுறல்

    இத்தனை காலம் கட்சிக்காக உழைத்த தங்களுக்கு தலைவர் பதவி தரப்படவில்லையே என்கிற குமுறலை ஆதரவாளர்களிடம் இவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் பாஜகவுக்கு நோட்டாவுக்கு கீழேதான் வாக்குகள். இப்போது பெரிதும் அறிமுகம் இல்லாத ஒருவரை அதுவும் இத்தனை போட்டி தலைவர்களுக்கு மத்தியில் தலைவராக அறிவித்திருக்கிறது பாஜக என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Senior BJP leaders like H Raja, Pon Radhakrishnan are shocking over the appointment of new state BJP President.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X