சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜூனியர் கலைஞர் உதயநிதி... அடைமொழி கொடுக்கும் சீனியர் நிர்வாகிகள்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் சீனியர் நிர்வாகிகளை மெச்ச வைத்துள்ளதோடு பாராட்டவும் செய்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட போது அவரை ஏற இறங்க பார்த்த பல சீனியர்கள், இப்போது அவரின் பேச்சும், ஹியூமர் ஆஃப் சென்ஸும் கருணாநிதியை போலவே உள்ளதாக புகழாரம் சூட்டுகின்றனர்.

இதனிடையே தனது பெயருக்கு முன்னால் எந்தப் பட்டப்பெயரும் வேண்டாம் என ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், இப்போது ஜூனியர் கலைஞர் என்ற அடைமொழியை கொடுக்கின்றனர் திமுகவின் மூத்த முன்னோடிகள்.

 உதயநிதியை வைத்து ரஜினியை அசால்ட்டாக டீல் செய்யும் திமுக.. 2021ல் இப்படி மட்டும் நடந்தால் அவ்வளவுதான் உதயநிதியை வைத்து ரஜினியை அசால்ட்டாக டீல் செய்யும் திமுக.. 2021ல் இப்படி மட்டும் நடந்தால் அவ்வளவுதான்

பெரிய பொறுப்பு

பெரிய பொறுப்பு

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்ட போது, சினிமாவில் நடிக்கும் இவர் கட்சி பணிகளுக்கு சரிபட்டு வருவாரா என பல சீனியர் நிர்வாகிகள் தங்களுக்குள் விவாதம் நடத்தி வந்தனர். மேலும், சிலரோ வேறுமாதிரி எல்லாம் மனக்கணக்கு போட்டு வைத்திருந்தனர். ஆனால் அவர்களின் மனக்கணக்குகளை எல்லாம் தவிடுபொடியாக்கி திமுக இளைஞரணியில் 30 லட்சம் இளைஞர்களை புதிதாக சேர்க்கும் பணியை தொடங்கினார் உதயநிதி.

நகைச்சுவை

நகைச்சுவை

உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரை இயல்பாகவே கூச்ச சுபாவம் உடையவர். ஆனால் அப்படிபட்ட நபர் தன்னை நம்பி மிகப்பெரிய பொறுப்பு கொடுத்திருப்பதை உணர்ந்து பொது இடங்களில் பேசும் திறனை வளர்த்துக்கொண்டார். நகைச்சுவை ததும்ப மேடையில் பேசுவது கருணாநிதியின் பாணி. அதனை கணக்கச்சிதமாக பின்பற்றத் தொடங்கினார் உதயநிதி.

தவிர்ப்பு

தவிர்ப்பு

உதயநிதி ஸ்டாலினை அவரது ரசிகர் மன்றத்தினரும், இளைஞரணியினரும் ஆர்வக்கோளாறில் சின்னவர் என்ற அடைமொழியில் ஆரம்பத்தில் அழைக்கத் தொடங்கினர். ஆனால் தனக்கு எந்த அடைமொழியும் வேண்டாம் என்றும், பட்டப்பெயர்களை தவிர்த்து அண்ணன், தம்பி, உறவுகளாக இருப்போம் என்றும் புகழ்ச்சியை ஒதுக்கி தள்ளினார். இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக அண்மையில் கலைராஜன் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியை கூறலாம்.

மூத்த நிர்வாகிகள்

மூத்த நிர்வாகிகள்

இதனிடையே உதயநிதி ஸ்டாலின் வருகையை விரும்பாத சில நிர்வாகிகள் கூட இப்போது அவரது நடவடிக்கைகளை பார்த்து மெச்சுகின்றனர். மேலும், ஆந்திராவில் ஜூனியர் என்.டி.ஆர். என ராமாராவின் பேரன் அழைக்கப்படுவதை போல் உதயநிதியும் ஜூனியர் கலைஞர் என்ற அடைமொழியில் அழைக்கப்பட வேண்டும் என மூத்த நிர்வாகிகள் விரும்புகின்றனர். இருப்பினும் தற்போதைக்கு எந்த பட்டமும் வேண்டாம் என்பதில் உதயநிதி உறுதியாக உள்ளார்.

English summary
Senior executives of DMK call Udhayanidhi stalin a junior kalaignar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X